Thursday, December 23, 2010

ஏலியன்ஸ் இருக்கிறார்களா............


                   செட்டி (SETI) என்றால் ஸெர்ச் ஃபார் எக்ஸ்ட்ரா டெரெஸ்டிரியல் இன்டெலிஜென்ஸ். இன்று மனிதனின் பலவிதமான ஏலியன்ஸ் தேடல்களை அவர்களிடம் தொடர்புகொள்ளும் முயற்சிகளை சேர்த்து விளிக்கும் ஒரே வார்த்தை செட்டி . வளி-அறிவு-ஜீவிகள் தேடல். [1 - எதற்கும் கீழே குறிப்பை ஒருமுறை பார்த்துவிட்டு தொடரவும்].
             பனிப்போரின் உச்சத்தில் 1960களில் அமெரிக்க ருஷ்ய கைகுலுக்கல்களுடன் நாஸா ஆதரவுடன் ஏக சாத்தியங்களுடன் தொடங்கி, பயோநீர் பட்டயம், வாயேஜர் வட்டு, பீட்டில்ஸ் பாட்டு என்று 1970களில் உற்சாகமாக அங்குமிங்கும் சுற்றி சைக்ளாப்ஸ், மெட்டி என்று 1980களில் அலைபாய்ந்து, டகில்பாய்ந்து, இன்டிரவெலுக்கு பின் தற்போது அரசாங்க ஆதரவற்று அரசிபோ சமிஞ்சை, வீட்டில் செட்டி, என தனிமனிதர்களின் கருணையில் ஜெனரல் வார்ட்டில் பி-பாஸிட்டிவ் ரத்தம் ஏற்றி உயிருடன் இருத்திவைக்கப்பட்டுள்ள ஏலியன்ஸிற்கான நம் ஒரு தலை ராகம்.
               டி.ராஜேந்தரின் அடுக்கு வசனங்கள் போல, செட்டி ரசிகர் மனதில் எஞ்சி நிற்பது ஸாகனின் காஸ்மாஸ் தொலைக்காட்சி தொடரும் புதிய-இனம் கான புதினம் படைக்க தாயுலகக்கட்டிலிருந்து விடுபட்டு தாவி நக்ஷத்திரங்களை சுவீகரிக்கும் அறிவியல் எழுச்சிப் பேச்சுகளும்தான்.

                  நாம் பார்க்கும் ஒளியைப்போல, ரேடியோவில் வாங்கி ஒலியாய் கேட்கும் 'ரேடியோ அலைகளும்' மின்காந்த கதிரியக்க நிறமாலையின் (எலக்ட்ரொமாக்னெட்டிக் ஸ்பெக்ட்ரம்) ஒரு பகுதியே. தந்தி, எஃப்.எம். ரேடியோ, யு.எச்.எஃப். டீவி நிகழ்ச்சி என்று நமக்கு பல அலைவரிசைகளில் பரிச்சயமானதுதான். பூமியின் வாயு-விளி மண்டலத்தை ஊடுருவி, ஒளியின் வேகத்தில் பலகாத தூரம் சிதையாமல் தகவல் தாங்கி செல்லக்கூடியது.
                  1959இல் குக்கோனி மாரிஸன் இருவரும் எழுதிய ஆராய்ச்சி கட்டுரைதான் முதலில் ரேடியோ அலைகளை வைத்து விளிமண்டலத்தில் இருப்பவரை தொடர்புகொள்வதற்கு அடிகோலியது. அவர்களே அயனோஸ்பியரை ஊடுருவி வரும் மைக்ரோ-அலைஅகலங்களையும் அலைவரிசைகளையும் பரிந்துரைத்தனர். பிரான்சிஸ் டிரேக் இந்நூலை 1960இல் கெட்டியாக பிடித்துக்கொண்டு, டிரேக் சமன்பாடு , செட்டி, பயோநீர் பட்டயம், அரசிபோ (ரேடியோ டெலஸ்கோப் - கீழே படத்தில்) சமிஞ்சை என்று இன்றுவரை தொடர்கிறார்.
               இவரின் நண்பரும் அறிவியலாளருமான கார்ல் ஸாகன் செட்டிக்காக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல முயற்சிகள் எடுத்தார். அறிவியல்தான் பனிப்போரைத்தாண்டி உலகமக்களை ஒன்றுசேர்க்கவல்லது என்பதற்கு அடையாளமாய் ருஷ்ய வானியலாளர் மற்றும் எக்ஸொபயாலஜிஸ்ட் இயோஸிஃப் இஷ்க்லோவிஸ்கி உடன் சேர்ந்து ஸாகன் எழுதிய இன்டெலிஜென்ட் லைஃப் இன் தெ யுனிவெர்ஸ் (1966) என்ற புத்தகம் ஏலியன்ஸ் தேடலில் முக்கிய ஆவனம். ஸாகன் ஒரு இருபது வருடம் செட்டியின் உபயோகத்தை, பணிகளை பொதுமக்களுக்கும், அரசாங்கத்திற்கும் புரியும்படி விளக்கி, ஆர்வமேற்படுத்தி, விளி-அறிவு-ஜீவிகள் தேடலை நிரந்தரமாக்கினார், தீவிரப்படுத்தினார். ஸாகன் உருவாக்கிய காஸ்மாஸ் தொலைகாட்சி தொடர் என்பதுகளில் அறிவியல் நோக்கையும் அதன்மூலம் கிடைத்த இயற்கையின் புரிதல்களை மட்டுமே நம்பி கண்களில் நீர் வரவழைத்த ஒரே மெகா சீரியல்.
இப்படி ரேடியோ அலைகளை அனுமானித்த ஒலியளவுகளில், அலைவரிசைகளில், சத்தில், அனுப்பியும், அண்டத்திலிருந்து வாங்கியும் ஏலியன்ஸுடன் தொடர்புகொள்ள இன்னமும் முயல்கிறோம். SETI, Project Ozma, Project Cyclops, Project Phoenix (SETI), SERENDIP மற்றும் Allen Telescope Array பல முயற்சிகள் நடந்துவருகிறது.
                1971இல் டிரேக் பரிந்துரைத்த 1500 டிஷ் ஆண்டெனாக்களை கொண்ட தொடர் ரேடியோ டெலஸ்கோப் சைக்லோப்ஸ் (இச்சுவையான அக்ரொநேம் பெயர்காரணத்தை யோசித்துப்பாருங்கள்) இன்றுவரை கட்டப்படவில்லை. பட்ஜெட் பற்றாக்குறையினால் (தேவையான செலவு அப்போதே 10 பில்லியன் டாலர்கள்).
               ஆனால் 1974இல் முடிந்ததை செய்வோம் என்று போர்ட்டோ ரீக்கோவில் அரசிபோ வானியல் ஆராய்ச்சி மையம் செட்டிக்கு உதவ ஏற்பாடானது. 
                                                     [அரசிபோ டெலஸ்கோப் படம்]
                         டிஷ் ஆன்டெனா ரிசீவரின் பரப்பளவு எவ்வளவு பெரிதாக உள்ளதோ அதற்கேற்ப குறைவான சத்துடன் விளியிலிருந்து வரும் சமிஞ்சையயும் பிரித்துணர்ந்து உள்வாங்கலாம். அதேபோல் பல லைட்டியர்கள் தூரம் சமிஞ்சை சத்து (சிக்னல் ஸ்ட்ரென்த்) குறையாமல் விளியில் நம் தகவலை அனுப்பலாம். வீட்டில் சொந்தமாய் டிஷ்-டிவி வைத்து டிஸ்கவரி-சேனல் மட்டும் பார்ப்பவர்களுக்கு இவ்விஷயம் உடனே புரியும்.
அரசிபோவில்தான் உலகிலேயே பெரிய தனி ரேடியோ டெலஸ்கோப் (டிஷ் ஆன்டெனா - மேலே படத்தில்) உள்ளது. விட்டம் 306 மீட்டர். கால் கிலோமீட்டருக்கும் சற்று அதிகம். நடுவில் குவிமைய பீடத்தில் பிள்ளையார் இல்லாவிட்டாலும், தினம் இருமுறை டிஷ்ஷை பிரதட்சனம் செய்தாலே நோயற்ற வாழ்வு.
                     அரசிபோ சமிஞ்சை ஏலியன்ஸிற்கு நாம் தர நினைத்த செய்தி. 1974இல் அரசிபோ மையத்திலிருந்து M13 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு நக்ஷத்திர கூட்டுருளையை நோக்கி அனுப்பப்பட்டது. M13 என்றால் வானியல் பொருட்கள் பட்டியலாகிய மெஸ்ஸியர் கேட்டலாகில் 13வது பொருள். நக்ஷத்திர கூட்டுருளை கிலோபுலர் ஸ்டார் கிளஸ்டர் என்பதின் தமிழாக்கம்.
அரசிபோ செய்தி என்ன என்று இக்கட்டுரையின் அடுத்த கீழ் பிரிவில் பார்ப்போம்.
                   அரசிபோ போல் உலகில் பல இடங்களில் ரேடியோ டெலஸ்ககோப் வைத்து நாம் வாங்கிக்கொண்டிருக்கும் ரேடியோ சத்தங்களில், 1977இல் ஜெர்ரி எஹ்மான் ஏலியன்ஸிடமிருந்து செய்தியோ என்பதுபோன்ற ஒரு ரேடியோ சமிஞ்சை குறியை கண்டார். தினம் சுற்றி கேட்கும் அர்த்தமற்ற-சத்தங்களிலிருந்து (வைட்-நாய்ஸ்) மேம்பட்டு, தற்செயலான ஒரே ஒருமுறை வந்த இந்த சமிஞ்சை வடிவம் (பாட்டர்ன்) வவ் சிக்னல் (ஆ! சமிஞ்சை) என்று பெயரிடப்பட்டு இன்று செட்டி கிடங்கில் புதைக்கப்பட்டுவிட்டது. மறுபடியும் வரவில்லை.
                  1979இல் இருந்து செட்டியின் மறுவடிவம் செரென்டிப் என்று பெயரிடப்பட்டு பெர்க்கிலி பல்கலைகழகத்திலிருந்து சூரியமண்டலத்திற்கு அருகில் இருக்கும் நக்ஷத்திரங்களில் தேடிக்கொண்டிருக்கிரார்கள். 2009 இல் தொடங்கிய செரன்டிப் 5திற்கு அரசிபோ வானியல் ஆராய்சிமையம் தற்போது உதவுகிறது.
                 ஆலன் தொடர் ரேடியோ டெலஸ்கோப்கள் 350 சிறிய டிஷ் ஆன்டெனாக்களை கொண்டு வடக்கு கலிஃபோர்னியாவில் உருவாக்கப்பட்டுவருகிறது. முன்னர் சொன்னபடி ரேடியோ அலைகளை ரிசீவ்செய்யும் பரப்பளவை விரிதாக்கும் வழி. தொலைவில் இருந்தோ அல்லது சத்துகுறைவான சமிஞ்சைகளை கேட்கும் முயற்சி. இதுவரை 42 டிஷ்கள் ரெடி. நிறைய பொருளுதவி செய்தவர் பில்கேட்ஸுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட்டை நிறுவிய பால் ஆலன். தொடர்ந்து பட்ஜெட் தடுமாறாமல் மொத்தமும் கட்டமுடிந்தால் அரசிபோவைவிட பெரிய கூட்டு-டிஷ் ரேடியோ ஆன்டெனா கிடைக்கும்.
                      இப்படி ரேடியோ அலைவரிசை தேடல்களுடன் கூடவே சிறிய லெவலில் ஆப்டிகல் டெலஸ்கோப்பிலும் தேடுகிறார்கள். ஏலியன்ஸ் ஏதாவது லேசர்ஒளிக்கீற்றை அனுப்புகிறார்களா என்று.
                    இவ்வளவு வருடங்கள் ரேடியோ அலைவரிசைகளில் மின்காந்த கதிரியக்க நிறமாலையில் (எலக்ட்ரொமாக்னெட்டிக் ஸ்பெக்ட்ரம்) தேடி எதுவும் பெயரவில்லை என்பதால், ஏலியன்ஸ் ரேடியோ தொடர்புதான் வைத்துக்கொள்வர் என்ற செட்டியின் ஆதார சிந்தையே தவறாக இருக்கலாம் என்ற புதிய கருத்து நிலவுகிறது. ஒருவேளை ரேடியோ அலைகளைவிட பலமடங்கு குவிப்புத்திறன் கொண்ட, அதனால் பலகாத தூரம் (பல லைட்டியர்கள்) சிதறாமல் சமிஞ்சை சத்து குறையாமல் செல்லக்கூடிய, லேசர் முலமாக தொடர்புகொள்வார்களோ என்று தற்போது வானியலாளர்கள் கருதுகிறார்கள். அதனால் இந்த புதிய (மனித கண்களால் 'பார்க்க' முடிந்த) ஆப்டிகல் அலைவரிசையில், ஏலியன்ஸிடமிருந்து வரலாமென்கிற லேசர் ஒளித்தேடல் தொடங்கியுள்ளது. ஆலன் அர்ரேயின் அருகில், ஒரு ஆப்டிகல் டெலஸ்கோப் இதைச் செய்கிறது.
                   இப்படியே போய், இன்றளவில் சென்டினல், மீட்டா, பீட்டா, மாப், பிராஜெக்ட் ஃபீனிக்ஸ், வீட்டில் செட்டி என்று அவரவர் வானியல் தகுதி, கருத்து, பொருளுதவிக்கேற்ப, பல செட்டி கிளை தேடல்கள் உலகெங்கிலும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. நாம்கூட ஹாக்கிங் போன்றோர் ஏலியன்ஸ்பற்றி ஏதாவது பேசியவுடன் சென்னையில் தலைநிமிர்ந்து எரிகற்களை முதல்முறையாக இரவில் வானில் பார்க்கிறோம். உபரியாக உன் விழியில் கலந்தேன் வின்வெளியில் பறந்தேன் என்று பாட்டுபாடி காதலியுடன் வின்வெளிப்பயணத்திற்கு ஆயத்தம் செய்கிறோம்.

                    ரேடியோ அலைகளை 1950களில் இருந்து ’வெளி’க்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம். மார்ஸ் அட்டாக்ஸ் என்ற எச்.ஜீ.வெல்ஸின் கதையை ஆர்ஸன் வெல்ஸ் 1950களில் ரேடியோவில் வாசித்த காலகட்டத்திலிருந்து, ஐ லவ் லூஸி வழிமொழிய, வண்ணச்சுடர், பல்குணன் செய்திகள், பல்குத்தல் விளம்பரங்கள், பீட்டில்ஸ் பாட்டு, தியாகராஜ ஆராதனை, அரசியல் அபத்தங்கள், அலங்கார பேச்சுகள், வெட்டிமன்றங்கள், அவசர தந்திகள்... இப்படி பலதை ’வெளி’யில் ரேடியோ அலைகளாக அனுப்பிக்கொண்டிருக்கிறோம்.
                நாம் அனுப்பும் ரேடியோ டீவி நிகழ்ச்சிகளையெல்லாம் ஏலியன்ஸ் நிச்சயம் இந்நேரம் கேட்டிருப்பார்கள், இனி ஹாக்கிங் சொல்வதுபோல் (முதல் பாகம் பார்க்கவும்) வாயைமூடிக்கொண்டால் என்ன (ரேடியோ சைலன்ஸ்) இல்லாவிட்டால் என்ன என்று தர்க்கம் புரிவது சரியல்ல. இதையெல்லாம் ரேடியோ டெலஸ்கோப் வைத்திருக்கும் ஏலியன்ஸ்கள் உடனுக்குடன் கேட்டுவிடுவார்கள் என்பதற்கான சாத்தியம் சொற்பமே. நம் ரேடியோ டீவி ஏ.எம். எஃப்.எம். யு.எச்.எப். அலைகள் சூரியமண்டலத்தை தாண்டி தட்டுப்படுவதே கடினம். 
                  சேங்காலிபுரம் பக்கமாக தண்ணியுள்ள குளக்கரையில் பும்மாலை குளிக்கச்செல்கையில் அக்கரையில் கிருஷ்ணவேணியை பார்க்கிறீர்கள். தமிழ்மகள் அவளின் கவனத்தை கவர இக்கரையில் சிறு கூழாங்கல்லை குளத்துடன் சத்தமின்றி முத்தமிட வைக்கிறீர்கள். குளத்தின் நீரலை அக்கரை நோக்கிச் செல்கிறது. அதற்குள் பையில் டார்ச் லைட் (தமிழில் பைவிளக்கு, இப்போ கைவிளக்கு) இருப்பது ஞாபகம்வந்து எடுத்து 'ஹாய் க்ருஷ்' என்று சமிஞ்சையாக ஏற்றுகிறீர்கள். நீரலை, ஒளியலை, அக்கரை கிருஷ்ணவேணி     எந்த அலையை முதலில் பார்க்க சாத்தியம் அதிகம்?
                  ஒளியலை என்றால் ம்ஹூஹும். குளத்தின் நீரலையைத்தான் கிருஷ்ணவேணி பார்ப்பாள் - ஏனெனில் அவள் தமிழ்ப்பெண், குனிந்த தலை நிமிரமாட்டாள்.
                  சரி, வேடிக்கை விட்டு யோசித்தால், டார்ச் லைட் ஒளியலை விரைவில் செல்வதோடு, ஒருவிதமாக குவிந்து, நீரலைபோல் உடனே சிதறாமல், மனித கண்களின் பார்க்கும் நிறமாலை அலைவரிசைக்குள் தெரிவதால், அதைப்பார்க்கத்தான் சாத்தியம் அதிகம். இல்லையா.
வளியில் கட்டுப்பாடின்றி செல்லும் நம் ரேடியோ டீவி நிகழ்ச்சிகளின் ரேடியோ அலைகள் குளத்தின் நீரலைகள் போல. சமிஞ்சை சத்தும் மிகக்கம்மி. சீக்கிரம் சிதறிவிடும்.
                 உதாரணமாக 5 மெகாஹெர்ட்ஸ் அலை-அகலத்துடன் 5 மெகாவாட்ஸ் சமிஞ்சை சத்துடன் உலகை விட்டு விளியில் செல்லும் சித்தி மானாட மயிலாட போன்ற டீவி மெகாசீரியல்களை, அரசிபோவின் (கால்கிலோமீட்டாருக்கும்அதிக விட்டமுள்ள) டிஷ் ஆன்டெனாவைப்போல 100 மடங்கு துல்லியத்துடன் ஒலிகளை பாகுபடுத்தும் டெலஸ்கோப் இருந்தாலும், சூரியமண்டலத்தை தாண்டியே சரிவர கண்டுணர்ந்து உள்வாங்க முடியாது. மேலும், சூரியமண்டலத்தின் சுறுவட்டாரத்தில் ஏலியன்ஸ் இருப்பதாய் இதுவரை காணோம். நம் மெகாசீரியல்களில் இருந்து தப்பித்தார்கள்.
                      விளி-அறிவு-ஜீவிகளை தொடர்புகொள்ள அரசிபோ போல் ரேடியோ வானிலை ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து அனுப்பப்படும் அலைகள் மேலே குறிப்பிட்ட குளக்கரை டார்ச் லைட் ஒளி போல. மிகுந்த சமிஞ்சை சக்தியுடன் அனுப்பப்படுபவை. சுற்றி ஒரு 100 லைட்டியர்கள் தொலைவில் ஏலியன்ஸ் அரசிபோ ஸைசில் பரவளைய ரிசீவரை வைத்துத்தேடினால் தட்டுப்படும் சாத்தியம் அதிகம். சக்திவாய்ந்த அரசிபோ சமிஞ்சை செய்தி 1974இல் இவ்வகையில் அனுப்பப்பட்டது. என்ன அது, சுருக்கமாக பார்ப்போம்.
       
          கட்டுரையில் தொடக்கத்தில் கூறியது போல, ரேடியோ அலைகளை எப்போதும் பாஸிவ்வாக ரிசீவ் - வெறுமனெ கேட்டுகொண்டு- மட்டும் இல்லாமல், ஆக்டிவாக நாமும் அவ்வப்போது ஏலியன்ஸ் கேட்பதற்கு செய்திகளை அனுப்பிக்கொண்டிருக்கிறோம். இதுவும் செட்டியின் ஒரு அங்கமே. தவிர, இன்று ஆக்டிவ் செட்டி என்று SMS போலவும் தேர்ந்தெடுத்த நட்சத்திரங்களை நோக்கிமட்டும் சக்தியுடன் சமிஞ்சை அனுப்பும் ஒரு இயக்கமும் இருக்கிறது. இதற்கு எதிர்ப்பும் இருக்கிறது. ஹாக்கிங் கூறுவது போல (முதல் பாகம் பார்க்கவும்).
                  ஆனால் இவ்வகை செய்திகளின் ஏலியன்ஸ் தொடர்புக்கான உபயோகத்தில் ஒரு ஆதார அவநம்பிக்கை இருக்கிறது.
            நம் இசை, நாகரீகம், கலாச்சாரம், பற்றியெல்லாம் ஏலியன்ஸ் புரிந்துகொள்ள சாத்தியம் கம்மி. அவர்கள் பயாலஜிபடி அவர்கள் சைக்காலஜி வேறாக இருக்கலாம். நமக்குள்ளேயே ராஜாவா ரஹ்மானா, மெட்டாலிக்காவா தியாகைய்யரா, ராக்கா கானாவா, ருஷ்ய உகெலிலியா ஸ்காட்லாண்டின் பாக்பைப்பா என்று இசையில் பிடித்தல் வேறுபாடு. ஏலியன்ஸுடன் ஒப்பிடுகையில், நம் காதுகளுக்கு இசை என்று கேட்பது அவர்களுக்கு, காதிருந்தால், எப்படியோ. அதைப்போல நமக்கு நீலமாக தெரிவது அவர்களுக்கு எப்படித்தெரிகிறாதோ. யோசித்துப்பாருங்கள், நம்மை ஏலியன்ஸுடன் இவ்வழிகளில் இணைக்கவே முடியாதபடி இடையில் இருக்கும் ஆழிப்பள்ளம் விளங்கும்.
                   காந்தளூர் (காந்தம்+ஊர்) வசந்தகுமாரன், ரத்தம் வேறு நிறம் என்று சுஜாதா கதைக்கு பதில் நிஜத்த உண்மையா எழுதலாம்.
இதனால்தான் ஏலியன்ஸுடன் தொடர்புகொள்ள அறிவியல் வரையறைகளை, விதிகளை, நாடுகிறோம்.
                    ஏன்? ஒரு உதாரணம், (சார்பியல் திருத்தங்களுக்கு உட்பட்ட) நியூட்டனின் விதிகள் என்று எடுத்துக்கொண்டால், அது நமக்கு எவ்வாறு இவ்வுலகில் இயங்குகிறதோ அதுபோலத்தான் அண்டசராசரத்தில் எங்கும் இயங்கும். இரு பருப்பொருள்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் விசை அவற்றின் திணிவிற்கு (பொருண்மை, மாஸ்) பெருக்கல்தொகைக்கு நேர்விகிதத்திலும், இடைப்பட்ட தூரத்தின் வர்கத்திற்கு எதிர்விகிதத்திலும் சார்ந்திருக்கும். இந்த விதி மாற்றி இயங்கும் தருணம் இதுவரை நாம் அறியவில்லையாதலால், அப்படித்தான் நம்பிக்கை. இந்த நம் அறிவியல் புரிதலை, அறிவை, ஏலியன்ஸுடன் எவ்வாறாவது பகிர்ந்துகொண்டால், கலாச்சாரம், கற்பனை, குறியீடுகள், பயாலஜி தாண்டி, அவர்களுக்கும் இது புரியும்தானே.
எப்படி செய்வது. எந்த மொழியில், பொதுக்குறியீடுகளில் செய்வது? படமாக போட்டுக் காண்பிப்பதா. அப்படியெனில் எந்த வடிவங்கள் ஏலியன்ஸுக்கும் நமக்கும் பொது? இதே ரீதியில் யோசித்துக்கொண்டே போனால் ஏலியன்ஸுடன் நாம் பேசக்கூடிய மொழி, பரிபாஷை, பிரத்தியட்ச உண்மைகளை கொண்டு கட்டப்பட்டுள்ள கணிதம்தான் என்று விளங்கும்.
பை என்ற நம்பரின் சூட்சுமம் நமக்குத்தெரியும் என்பதை ஏலியன்ஸுக்கு புரியவைக்க வாய்பேசத்தேவையில்லை. பயாலஜி எப்படியோ, பார்வை என்று இருந்து, பார்த்தல் என்பது பொது என்றால், வட்டமும் ஏலியன்ஸ் பார்த்தாலும் அதே வடிவ வட்டமே.
                       இவ்வாறு யோசித்து முதலில் அனுப்பிய பயொநீர் பட்டயத்தில் கூட நம் 'நிரந்தர' அறிவியல் 'அறிவை' பொறித்திருக்கிறோம்.
செட்டியின் தொடக்கத்தில்  வாயேஜர் வட்டு என்று சமுத்திரத்தில் தத்தளிக்கையில் பாட்டிலினுள் வைத்து செய்திகள் அனுப்புவதுபோல் செய்துதோம். கார்ல் ஸாகன் தலைமையில், பிரான்சிஸ் டிரேக் (டிரேக் சமன்பாடு சொன்னவர் - சென்ற பாகம் பார்க்கவும்) உதவியுடன் கமிட்டி இவற்றில் என்னென்ன விஷயங்கள் இடம்பெறவேண்டும் என்று நிர்ணயித்தது.
பயொநீர் பட்டயம் தங்க முலாம் பூசப்பட்ட அலுமினிய தகடு. 1972 மற்றும்1974இல் பயொநீர் 10, 11 வின்வெளி ஊர்த்திகளில் கழுத்தில் டோக்கன் போல மாட்டி சூரியமண்டலத்தைத் தாண்டி வின்வெளி நோக்கி அனுப்பப்பட்ட முதல் மனித 'பாட்டில் செய்தி'.
                   மேலே பயொநீர் பட்டயம் படம் பாருங்கள். மொத்தமும் ஸாகனின் அப்போதைய மனைவி, லின்டா ஸாகன் வரைந்தது. பெண் உறுப்பை குன்சாய் மட்டுமே வரைந்துவிட்டிருப்பதற்கு பல நுண்அரசியல் காரணங்கள் இருக்கலாம். பின் வந்த வாயேஜர் வட்டில் நிர்வாண நரன் நங்கை நீக்கப்பட்டனர். ஏலியன்ஸ் நம்மை தவறாக நினைத்துவிடக்கூடாது என்று. சத்தியமாய் அதான் காரணமாம். இதைப்பற்றி புரளிகளே செய்தியாகும் அளவிற்கு வந்துள்ளது. ஸாகன் நேரிடையாக எதுவும் (குறை) கூற மறுத்துவிட்டார்.
                      சரி, அறிவியல் மேட்டருக்கு வருவோம். பட்டயத்தில் கணிதம் இரண்டடிமான எண்களில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டடிமான எண்களே கணினியின் ஆதார பருப்பொருள் என்று நமக்குத் தெரியும். ஏலியன்ஸிற்கும் தெரியும் என்பது அனுமானம். இடது மேல் கோடியில் ஹைட்ரஜன் மூலப்பொருளின் ஹைப்பர்ஃபைன் டிரான்ஸிஷன் எனப்படும் ஒரு சுருள் (ஸ்பின்) மதிப்பிலிருந்து மற்றொன்றிற்கு எலக்ட்ரான் மாறுவதை குறிப்பிடும் படம். தீக்குச்சி போல் இருக்கும் செங்குத்து கோடு (எலக்ட்ரான்) தலைகால் மாறியிருக்கிறது பாருங்கள்.
                   ஹைட்ரஜன்தான் பிரபஞ்சத்தில் அதிகம் விரவியிருக்கும் மூலப்பொருள். அதன் எலக்ட்ரானின் மேல்-சுருள் (ஸ்பின்-அப்) கீழ்-சுருளாய் (ஸ்பின்-டௌன்) மாறும் நிகழ்ச்சி ஒரு காலத்தையும் (1420 மெகாஹெர்ட்ஸ்), அலை நீளத்தையும் (21 சென்டிமீட்டர்கள்) நிர்ணயமாய் குறிப்பிடும். மண்டையை உருட்டாதீர்கள். பல அறைகள் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் ஒரு ஆள் ஒரு அறையில் இருந்து நடந்து மற்றொரு அறைக்கு செல்ல நிச்சயமான ஒரு காலம், தூரம் (ஆற்றல் விரயம்) இருக்குமல்லவா அது போலத்தான் இந்த ஹைட்ரஜன் எலக்ட்ரான் சுருள் மாற்றம். பிரபஞ்சத்தில் அனைத்து இடங்களிலும் இந்த சுருள் மாற்ற கால, இட மதிப்புகள் அதே (அறிவியல் கூற்று). இந்த அளவுகளை வைத்து மற்ற அளவுகளை பட்டயத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
                  உதாரணமாய், நரன், நங்கை அருகில் வலதுகை ஓரத்தில் குறுக்காக ஒரு 1--- என்பதுபோன்ற குறிகள் இருக்கிறது பாருங்கள். அது இரண்டடிமானத்தில் 1000, அதாவது, எண் 8. இந்த 8ஐ மேலே குறிப்பிட்ட அலைநீளம் 21 சென்டிமீட்டருடன் பெருக்கினால், 168 சென்டிமீட்டர் வரும்; அதாவது மனிதகுலத்தின் சராசரி உயரம்.
                      சூரியக்கதிர்கள் போல் இடதுபுறம் இருக்கிறதே, அதன் மையப்புள்ளி சூரியனைக்குறிக்கிறது ஆனால், 'கதிர்கள்' 14 பல்ஸார் வகை (ரேடியோ அலைகளை உமிழும்) நட்சத்திரங்களின் இடங்களை, சூரியனின் இருக்கும் இடத்தை வைத்து குறிப்பிடும் (திசை, தூரம்) கோடுகள். ஒவ்வொரு பல்ஸாரின் தூரத்தையும் இரண்டடிமானமாக கோடுகள்மீதே எழுதியுள்ளார்கள் பாருங்கள். ஒருவேளை பயொநீர் பட்டயம் ஏதாவது ஏலியன்ஸிடம் மாட்டினால், இந்த தகவலை வைத்து டிரையாங்குலேஷன் முறையில் நம் சூரியன் எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.
                            சந்தேககங்கள் இருக்கும். இப்போதைக்கு இது போதும். தாண்டிச்செல்லுவோம்.
                      இதேபோல் வாயேஜர் வட்டிலும், இவ்வகை யோசனைகளை விரிவாக்கி, பல அறிவியல் விஷயங்களை பொறித்து அனுப்பியுள்ளோம். வாயேஜர் வட்டு படம் அருகில். பயொநீர் பட்டயம் பாட்டில் செய்தி என்றால், இது இசை பாட்டில் செய்தி. உலகின் சப்தங்கள் அடங்கியது.
                                                [வாயேஜர் வட்டு பின்பக்கம்]
இவற்றிலிருந்து மாறுபட்டது அரசிபோ ரேடியோ சமிஞ்சை. உலகிலிருந்தபடியே குறிப்பிட்ட ரேடியொ அலைவரிசைகளில் அனுப்பப்பட்டது. இது திட்டமிட்டு ஏலியன்ஸிற்காகவே அனுப்பப்பட்ட நம் முதல் ரேடியோ அலை செய்தி.
                        ஏற்கனவே குறிப்பிட்ட அரசிபோ வானியல் ஆராய்ச்சிமையத்திலிருந்து சக்தி வாய்ந்த சமிஞ்சையாய் அனுப்பியுள்ளோம். பல அறிவியல் விஷயங்களை (இதுவரை பார்க்காத) ஏலியன்ஸுடன் பகிர்ந்துகொள்கிறது. அருகில் படத்தில் அரசிபோ சமிஞ்சை செய்தியின் படம் உள்ளது. இச்செய்தியும் இரண்டடிமான எண்களால் ஆனது.
[அருகில் படத்தில்: 73 x 23 அணிவரிசையில் பார்த்தால் தெரியும் அரசிபோ சமிஞ்சை செய்தி]
                     மொத்தம் 1679 எண்கள். 1679 ஒரு செமி-பிரைம் அதாவது இரண்டு பிரைம் எண்களின் (23 x 73) பெருக்கல் தொகை. செய்தியை புரிந்துகொள்ள ஒவ்வொன்றும் 23 இலக்கங்களை கொண்ட73 வரிகளில் எழுதவேண்டும். அருகே படத்தை பாருங்கள். 73 கிடை வரிசை (row), 23 நெடுக்கு வரிசைகள் (column) இருக்கும். மாற்றி 73இன் கீழ் 23 என எழுதினால் செய்தி குப்பையாகிவிடும். மிச்ச எண்களின் சேர்க்கையிலும் 1679ஐ கொண்டுவந்தாலும் குப்பையே. விளி-அறிவு-ஜீவிகளான ஏலியன்ஸிற்கு நிச்சயம் கணித உண்மைகளான, பிரைம் எண்கள், இரண்டடிமான எண்கள் (கணினி தொடர்பு) பற்றி தெரிந்திருக்கும் என்று அனுமானம்.
                        1679 டிஜிட்டுகளில் உள்ள இச்செய்தி நீளம் கிட்டத்தட்ட 200 கணினி பைட்டுகள். 2380 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் அனுப்பப்பட்டது (நம்மூர் எஃப்.எம். கோல்டு 102.3 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை - கர்நாடக இசை நிறைய ஒலிபரப்புவார்கள்). இரண்டடிமானம் என்பதால் ஒன்று அல்லது பூஜ்ஜியம் மட்டுமே செய்தி வடிவம், இல்லையா. இவ்வெண்களை ஒரு நொடிக்கு பத்து பிட்கள் என்று பிரித்து மூன்று நிமிடங்களுக்குள் அனுப்பினார்களாம்.
                       முக்கியமான விஷயம், நம் அன்றாட ரேடியோ நிகழ்ச்சி சமிஞ்சை சக்தியிலிருந்து பலமடங்கு அதிகமான சக்தியுடன் அனுப்பப்பட்டது. 1 டெர்ரா வாட்கள். டெர்ரா என்றால் ஒன்றிற்கு பிறகு 12 பூஜ்ஜியங்கள். 500 மெகாவாட் (என்று நினைக்கிறேன்) வடசென்னை பவர்-ப்ளாண்ட் போல இருபதின் மொத்த உற்பத்திதிறனும் 3 நிமிடங்களுக்கு இந்த சமிஞ்சையை சத்தூட்ட செலவிடவேண்டும்.
                     மின்சாரத்துறை பலசமயம் மின்வெட்டுத்துறையாய் பணியாற்றும் ஆற்றல் பற்றாக்குறை காலத்தில், இந்த ஆற்றல் செலவீனங்கள் கட்டுப்படியாகாது என்றுதான் நாம் ஏல்யன்ஸிற்கு இவ்வகை சமிஞ்சை சத்துடன் செய்தி அனுப்புவதை தவிர்கிறோம். செய்யமுடியும் என்பதற்கு அடையாளமாய் அரசிபோ சமிஞ்சை.
                      சரி, என்ன செய்தி அனுப்பினோம்? அது ஏழு பகுதிகளாலானது. நம் எண்களிலிருந்து (படத்தில் முதல் நான்கு வரிசைகள்), மரபணுவின் முலப்பொருள்களின் அணு-எண்கள், மனித அளவுகள், என்று பயொநீர் பட்டய பட்டியலைவிட நீண்ட ஒரு பட்டியல். இப்போதைக்கு விட்டுவிடுகிறேன்.
அரசிபோ சமிஞ்சை M13ஐ நோக்கி 1974இல் அனுப்பியுள்ளோம் என்று பார்த்தோம். சென்றடைய 25000 வருடங்கள் பிடிக்கும். கேட்டு அதே வேகத்தில், சக்தியில், ரேடியோ அலை பதில்போட்டால் இன்னொரு 25000 வருடங்கள் ஆகும் நாம் அரசிபோ ஆன்டெனாவில் ரிசீவ் செய்ய.
ஏற்கனவே பார்த்தபடி, ரேடியோ அலையின்றி, நேரடியாக பயொநீர் பட்டயம் பிறகு 1977இல் உலகின் ஓசைகளை அடக்கி வாயேஜர் வட்டு என்று அனுப்பியுள்ளோம்.
                          2004இல் சூரியமண்டலம் என்று நாம் (ப்ளூட்டோவை தாண்டி) வரையறுத்து வைத்துள்ள இடத்தை கடந்து வாயேஜர் 1 'வெளி'யே சென்றுவிட்டது. வாயேஜர்2 தற்போது இத்தூரத்தை கடந்துகொண்டிருக்கிறது. என் சஷ்டியப்தபூர்த்தியில் (2036இல்?) ஹெலியோ-பாஸ்ஸை கடந்துவிடும் என்று ஞாபகம். ஒரு 40000வருடங்கள் கழித்து இரண்டும் அருகில் இருக்கும் இரண்டு நட்சத்திரங்களுக்கு அருகே சென்றுகொண்டிருக்கும்.
                          அங்கிருக்கும் கிரகங்களில், யாராவது பாட்டிலை மறித்து பாட்டுக்களை கேட்டால் பதில் தூதோ, தூமகேதுவோ அனுப்பலாம். நாம் அனுப்பியதுபோலவே தூதென்றால், அது இங்குவர இன்னொரு 40000 வருடங்கள் ஆகும். வேறு ஏதோ அதீதவேகத்தில் அனுப்பும் தொழில்நுட்பம் என்றால், நம் ஆசைக்கு உடனே வந்துவிடும் என்று கற்பனை செய்துபார்க்கலாம்.
                          மனிதகுலம் அதுவரை உயிருடன் இருந்தால், நம்ம ஆண்டிரோமிடா ஏலியன்ஸ் லெட்டர் போட்டிருக்கான், சூரியன் சிவப்புராட்சஸனாவதற்குள் ஒரு எட்டு நம்மை பார்க்க ஃபோட்டான்டிரைவ் வின்வெளிக்கப்பலில் ஹைப்பர்ஸ்பேசில் வாரானாம் என்று ஹைபர்நேஷனில் ஞாபகார்த்தமாய் உயிருடன் பதப்படுத்தப்பட்ட, ஆறாவது முறையாய் (புஷ்பராக தோடுடன்) புதுக் காது மாற்றிக்கொண்டிருக்கும், வீட்டு எள்ளுப்பாட்டிகளிடம் செய்தி சொல்லலாம்.

                         ஏலியன்ஸுடன் தொடர்பு என்பது இவ்வகை அறிவியல் யோசனைகள், கற்பனை நீட்சிகளின் சுவையான சாகரம் இது. அறிவுத்துறையும் இலக்கியமும் கடவுள் பாதி கனவு பாதியாய் கலந்து செய்த கலவை. கார்ல் ஸாகன் தன் கான்டாக்ட் விஞ்ஞானப்புனைகதையில் இப்படி பல உதாரணங்கள் கொடுத்திருப்பார். அனைத்துமே அறிவியல் நீட்சியாய் சாத்தியங்களே. இக்கதையை திரைப்படமாகக்கூட எடுத்தார்கள்.
SETI பற்றி கார்ல் ஸாகனின் 1979 பேச்சு இன்றும் பெருமளவு உண்மையே.
[youtube=http://www.youtube.com/watch?v=sZt3Zg2y8ks]
கட்டுரை, கவனம் இவற்றின் சுருக்கம் கருதி இவ்விளக்கங்களை இத்துடன் நிறுத்துகிறேன்.
ஆனால்...
          இவ்வகை ரேடியோ செய்திகள், தேடல்களில் ஏலியன்ஸிடம் தொடர்பு கொள்ள சாத்தியம் மிகக்கம்மி என்று கசப்பாக இப்போது புரிகிறது. எழுபதுகளில் இருந்த ஆரம்ப ஜோர் போய், இப்படி தேடுவதற்கான பொருளுதவி இப்போது பெருமளவில் குறைந்துவிட்டது. முயற்சியை விட்டுவிடக்கூடாது என்று டிரேக்-ஸாகன் வழிவந்தவர்கள் இன்னமும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
இப்படித் தேடியும் இன்னமும் மாட்டவில்லை. ஒருவரும் பதில் பேசவில்லை. பட்ஜெட் தட்டுப்பாட்டுடன் இன்னமும் ஓய்வுநேரத்தில் நாமும் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். உருவகமாகவோ என்னவோ, இன்று உலகிலேயே பெரிய அரசிபோ ரேடியோ டெலஸ்கோப் ஜேம்ஸ்பாண்ட் வில்லனுக்கு உதவும் சாட்டிலைட் ரிசீவர் சாதனமாக (பியர்ஸ் பிராஸ்னன் ஜேம்ஸ்பாண்டாய் முதலில் நடித்த கோல்டன் ஐ படத்தில்) சித்தரித்து புதிய தலைமுறைக்கு கொடுக்கிறோம்.
                     ஒருவேளை, அவர்கள் லோக ஹாக்கிங் கருத்தை மதித்து, ஏலியன்ஸும் நம்மைப்போல பயந்துகொண்டு சத்தம்போடாமல் இருக்கிறர்களா? ஏலியன்ஸும் நாமும் (அனைவரும் அடுத்தவருக்கு ஏலியன்ஸே) ஒருவருக்கொருவர் இவ்வாறே நினைத்தால் யாரும் அடுத்தவரை தொடர்ப்பு கொள்ள எத்தனிக்காமல் ‘மறைந்து’ வாழ்வோம். இதுவரை அதுதான் நடக்கிறாதோ? யோசித்துப்பார்த்தால் ஒருவகையில் சென்ற பாகத்தில் குறிப்பிட்ட ஃபெர்மி பாரடாக்ஸிற்கு இது சரியான தீர்வு.
ஏலியன்ஸ் தேடல் புனித கோப்பையை தேடிப் போகும் இன்டியானா ஜோன்ஸின் பயணம் போல. முடிவில் கோப்பையை அடையவேண்டும் என்பதல்ல; வழியில் சந்திக்கும் உன்னதங்கள் பல. மேலும் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. புத்தகமாக எழுதமுடிகையில் சொல்கிறேன்.
முடிக்கும் முன் ஒரு ஷார்ட் ரீக்காப். மறுவுரைச்சுருக்கம்:
                     ஏலியன்ஸ் இருக்கிறார்களா? இவ்வளவு பெரிய அகண்டத்தில், இருக்கத்தான் சாத்தியம் அதிகம். ஹாக்கிங், பால்டேவிஸ் என்று அநேக அறிவியலாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.
                    அறிவியல் ரீதியாக ஏலியன்ஸை நம்பலாமா? பிரபஞ்சத்தின் குணாதிசியங்களின் நம் அறிவியல் புரிதல்களை வைத்துக்கொண்டு, மனித உள்ளுணர்விலிருந்தே நம்பலாம். டிரேக் சமன்பாடு இவ்வகை லாஜிக்கின் எழுத்துவடிவம். ஆனால் அறிவியல் கூற்று இல்லை. சரியா தவறா என்று நிரூபணம் செய்யமுடியாது. ஏலியன்ஸை பார்க்கும்வரை நிச்சயம் கிடையாது. ஆனால் பொய்-அறிவியலும் இல்லை. நாம் தோன்றி, இருக்கலாம் என்றால், வேரொருவரும் அவ்வாறே இருக்கலாமே என்பதன் அறிவியல்ரீதியான நம்பிக்கை.
                     நம் தேடல் பயனளிக்குமா? தெரியாது. ஏலியன்ஸ் - தேடினால் நிச்சயம் கிடைப்பார்களா என்று தெரியாது. ஆனால் நாம் தேடாமல் விட்டால் நிச்சயம் கிடைக்காமல் போய்விடுவார்கள். ஏதோ மொத்தமாக மூடிவைத்துவிட்டு, நாம் ஏலியன்ஸிற்கு ரேடியோ அலை தகவல் அனுப்புவதாக சால்ஜாப்பில், ஓய்வை மெகாசீரியல் கற்பனைத்திறன் வெளிப்பாட்டில் செலவிடச் செல்லாமல் இருந்தால் நன்று.
                       சரி, தேடினால் எப்போது கிடைப்பார்கள்? தெரியாது. ஏற்கனவே தேடலுக்காகும் செலவை மொத்தமாக குறைத்து விட்டோம். பொதுமக்கள், பணக்காரர்கள் சிலரின் தயவில் இப்போது முடிந்த இடத்தில் ரேடியோ அலைகள் அடித்து தேடிக்கொண்டிருக்கிறோம். போறாக்குறைக்கு தேடும் வழிகளே தவறோ என்று அவ்வப்போது கால்களுக்கிடையே (லாஜிக்கிலேயே) அடிவாங்குகிறோம். சுதாரித்து ரேடியோ இல்லையேல் லேசர் இல்லையேல்...என்று நம்பிக்கையை கரெக்ஷன் செய்துகொள்கிறோம். இப்படி புதிய டேட்டா, விஷயங்கள், கிடைக்க அதைவைத்து தன் கூற்றுக்களை மாற்றி புதுப்பித்துக்கொள்ளுதல் அறிவியலுக்கு அழகு. ஏலியன்ஸ் கிடைக்கிறர்களோ இல்லையோ, எக்ஸோ-பயாலஜி, xeனாலஜி, ரேடியோ வானியல், தகவல்தொடர்பு, சார்ந்த யோசனைகள், பரிசோதனைகள் என்று நம் அறிவியலை, புரிதல்களை ஓரளவு வளர்த்துகொள்ள இத்தேடல்கள் அவ்வப்போது உதவுகிறது.
                 பூமிக்கு ஏலியன்ஸ் வந்துள்ளார்களா? வந்ததற்கான, வருவதற்கான ஆதாரம் எதுவும் ருசுவுடன் நிருபிக்கப்படவில்லை. இடையே இன்டிபென்டென்ஸ் டே போன்ற திரைப்படங்கள், ஏலியன்ஸுடன் பாலியல் தொடர்பு, வேற்றுகிரக-இறை அனுக்கிரகம், சார்ந்த ஊடக பேட்டிகள், ஒலிக்கடிகள் (சௌண்ட்-பைட்), எரிக் வான் டனிக்கனின் சாரியட்ஸ் ஆஃப் காட் போன்ற பாதி-உண்மை (மீதி உட்டாலக்கடி) 'பாப்புலர்' புத்தகங்கள், வெகுஜன சஞ்சிகைகளில் புருடா கட்டுரைகள் என்று பதினைந்து நிமிடப்புகழ் வெளிச்சம் தொடர்ந்து நம்மில் பலருக்கு கிட்டுகிறது.
                   பூமிக்கு ஏலியன்ஸ் வருவார்களா? வரமாட்டார்கள் என்று நான் கூறவில்லை. வந்தால் நன்றாக இருக்குமே என்றுதான்... பால் டேவிஸ் கருதுகிறார். ஹாக்கிங் அப்படிக்கருதவில்லை (முதல் பாகம் பாருங்கள்). நம் அநேகர் கருத்து, வந்தா பாத்துப்போம்யா, பொழப்ப கவனிப்போம்...
என் அபிப்பிராயம்? சொந்தமாக வளர்க்கும் அளவிற்கு அபிப்பிராயம் நாய்குட்டியா. மேலும், டேட்டா இல்லமல் உண்டு இல்லை என ஒரே அபிப்பிராய நாய்குட்டி வளர்ப்பது அறிவியல் சிந்தைக்கு கெடுதல். ஏலியன்ஸ் என்ன அரசியலா, மதமா, உலகிலுள்ளோர் அனைவரும் ஒரு செல்ல நாய்குட்டி வளர்ப்பதற்கு.
                  நான் உடன்படும் கருத்தை கீழே கால்வின் ஹோப்ஸிடம் கூறுகிறார் பாருங்கள். ஒரிஜினல் கருத்து, கார்ல் ஸாகன் 1968இல் தன் இண்டெலிஜெண்ட் லைஃப் இன் தெ யூனிவெர்ஸ் புத்தகத்தில் கூறியது.

சிலசமயம் நா என்ன நினைக்கிறேன்னா, பிரபஞ்சத்தில் வேற எங்கயோ அறிவுள்ள உயிர் இருக்குங்கறத்துக்கு நிச்சயமான அறிகுறியே நம்மோட அவங்க தொடர்பு செய்ய முயலாததே. எப்பூடி.............

ஏலியன்ஸ் நிறைவு


                   ஏலியன்ஸ் பற்றிய புரிதலை, அறிவியலை விளக்கி விரைவில் புத்தகமாக்கலாம் என்று (உங்கள் அபிமான பதிப்பகத்தாருடன்) தீர்ப்பாகியுள்ளதால், இதுவரை எழுதிவந்த ஏலியன்ஸ் பற்றிய தொடர் கட்டுரைகளுக்கு முற்றும் போடலாம் என்றிருக்கிறேன்.
ஏலியன்ஸ் தேடல் பற்றிய சுவையான பல விஷயங்களில் சிலவற்றை இங்கு அறிமுகப்படுத்தாமல் விட்டிருக்கிறேன். உதாரணமாக:
  • ஏலியன்ஸ் தேடல் அறிவியலா புரட்டா?
  • பெர்மி பாரடாக்ஸ் - சில தீர்வுகள்
  • மறைமுகத் ஏலியன்ஸ் தேடல்
  • எக்ஸோ கிரகங்கள்
  • நேனோ புரோபுகள் – வைரஸ்கள் மூலம் அறிதல்
  • ஏலியன் மேஜிக் - தொழில்நுட்ப விளைவுகளின்மூலம் கண்டறிதல்
  • கர்டஷாவ் அளவையும், டைசன் உருளையும்
  • விஞ்ஞானப்புனைவுகளுக்கு அப்பால்
  • விண்வெளிப்பயணம் - விஞ்ஞானமும் விஞ்ஞான புனைவுகளும்
இவை புத்தகத்தில் நிச்சயம் இடம்பெறும்.
புத்தகத்தின் முதல் மாதிரிவடிவம் தயார்.
ஆனால், ஏலியன்ஸ், அறிவியல் என்பதெல்லாம் வெறும் அறிவுத்துறை. நான் எழுதுவதை எழுதுவேன் முடிந்தால் புரிந்துகொள், இல்லை ஒதுங்கு என்று இதை இலக்கியத்திற்கொப்பாய் தடாலடிக்க எனக்கு பிரியமில்லை. அறிவியலை படித்து புரிந்துகொள்ள ஒரளவாவது முயற்சி எடுக்கும் வாசகர்களுக்காவது, அவர்கள் சந்தேகங்கள் தீரவேண்டும், புரிதல் மேம்படவேண்டும்.
ஆகையால், Writing 2.0 வகையில் இணையத்திலேயே புத்தகத்தை எழுத முயல்வதால் வரும் வசதியை உபயோகிப்போமே. இங்கு படித்துக்கொண்டிருக்கும் வாசகர்களுக்கு வேண்டுகோள்:
ஏலியன்ஸ் தேடல், அதன் அறிவியல் பற்றிய உங்கள் சந்தேகங்களை இந்த பதிவின் மறுவுரையாக எழுதுங்கள். சந்தேகம் எவ்வளவு எளிமையானதாக இருந்தாலும் சரி. கேளுங்கள். Readers pulse என்பார்களே, அதை கைபடாமல் பிடித்து பார்த்துக்கொள்ள எனக்கு உதவும். புத்தகத்தின் விளக்கங்களை மாற்றியமைப்பேன், செம்மையாக்குவேன். மேலும், புத்தகத்தில் ஒரு பகுதியை இக்கேள்விகளுக்கான பதில்களுக்கு ஒதுக்கியிருக்கிறேன்.
(எனக்கு பதில் தெரியாத கேள்வின்னானும் கமெண்ட் பிரசுரமாகும். பதில்... புத்தகம் வருவதற்குள் அடியேனால் ஏலியப்பயல்களிடமிருந்து நேரடியாக கண்டறியப்படும்...ஹி, ஹி...)

மூளை இல்லாதவர்கள் படிக்க வேண்டாம்…....

brain_pool













       


          தினமும் ஏதேதோ பணிகள் செய்கிறோம், இவற்றில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பல செயல்கள் நமது மூளையைப் பாதிக்கின்றன.

1. காலையில் அலறி அடித்துக் கொண்டு எழுந்து, குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பி, குளித்துவிட்டு அலுவலகத்துக்கு ஓடவேண்டும். இதுக்கு இடையில் காலை உணவெல்லாம் சாப்பிடுவதே இல்லை. அதுக்கெல்லாம் நேரமில்லை என சொல்லும் ஆசாமியா நீங்க ? கவனம் தேவை. காலை உணவைத் தவிர்த்தால் உடலில் சருக்கரை அளவு குறைந்து விடுகிறது. இதன் மூலம் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் போய்விடுகிறது. இதன் மூலம் மூளை சோர்வடைகிறது.

2. சிலர் இதற்கு நேர் எதிர். எப்போ உட்கார்ந்தாலும் கிலோ கணக்கில் உள்ளே தள்ளினால் தான் திருப்தி ! அவர்களுக்கும் சிக்கல் இருக்கிறது. அதிகம் உண்டால் மூளை தனது உற்சாக திறனை கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கும். அதிலும் சிப்ஸ், பீட்சா, கோக் போன்ற குப்பை உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் மூளையும் காயலான் கடைக்குப் போடும் நிலைக்கு வந்து விடும். உனவில் மீனை தொடர்ந்து உட்கொள்வது மூளையின் நினைவாற்றலை வயதான காலத்திலும் கூர்மையாக வைத்திருக்கும் என்பது மீன் பிரியர்களுக்கான துள்ளல் செய்தி !

3. புகை பிடித்தல் ! மூளையின் முக்கியமான எதிரி. மூளையை இது சுருங்க வைக்கும், நினைவிழக்க வைக்கும், பிற்காலத்தில் அல்சீமர் போன்ற நினைவிழத்தல் நோய்களுக்கெல்லாம் காரணமாகிவிடும். கோகைன் போன்ற பொருட்களும் மூளைக்கு எதிரி. அது மூளையின் ஒரு குறிப்பிட்ட அணுக்களை சுனாமி போல வாரி அழித்துச் சென்று விடும்.

4. மொடாக்குடியர்களுக்கு மூளை செல்லாக்காசாகி விடும். கொஞ்சமாய் குடிப்பது மூளைக்குப் பாதிப்பில்லை (வேறு பல பாதிப்புகள் உண்டு என்பது கண்கூடு) என்றாலும் அதிக அளவு மது மூளையின் அணுக்களைக் கொலை செய்து விடுகிறது. எதுக்கு வம்பு, போதையை விட்டு விலகியே இருக்கலாமே !

5. சரியான அளவு தண்ணீர் குடிக்காததும் மூளையைப் பாதித்து விடுகிறது. உடலில் தேவையான அளவு தண்ணீர் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் குறைந்த இடைவெளியில் அதிக தண்ணீரைக் குடிப்பதை விலக்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாய் அடிக்கடி குடிப்பதே மிகச் சிறந்தது, தேவையானது !

6. அடிக்கடி தலையை வேகமாய் ஆட்டுவது கூட மூளைக்குக் கெடுதலாம். உங்கள் தலை உங்களிடம் தானே இருக்கிறது, தேவையில்லாமல் ஆட்டாதீர்கள்.

7. அதிக இனிப்பை உட்கொள்வதும் மூளைக்கு நல்லதல்ல. புரோட்டீன்களையும், சத்துகளையும் கிரகித்துக் கொள்ளும் உடலின் தன்மையை அது குறைக்கிறது. இதன் மூலம் மூளையின் வளர்ச்சியும் தடைபடுகிறது.

8. உடலில் பிராணவாயுவை அதிகம் எடுத்துக் கொள்ளும் ஒரு பகுதி மூளை. இதனால் தான் மூச்சுப் பயிற்சிகள் மூளை வளர்ச்சிக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன. சுகாதாரமற்ற காற்று உள்ள இடங்களில் தங்க நேர்ந்தால் அந்த காற்றின் மாசு, மூளையின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

9. நிம்மதியான தூக்கம் மூளையின் நெருங்கிய நண்பன். மூளையை புத்துணர்ச்சியுடனும் கெட்ட செல்கள் இல்லாமலும் பாதுகாப்பது நிம்மதியான தூக்கமே.

10. மன அழுத்தம் மூளையைப் பாதிக்கும் முக்கியமான ஒரு வில்லன். கொஞ்சம் அழுத்தம் நம்மை இலட்சியத்தை நோக்கி ஓடச்செய்யும், ஆனால் அதிகப்படியான அழுத்தம் மூளையின் அணுக்களைக் கொன்று விடும்.

11. தலையை மூடிக் கொண்டு தூங்குவது மூளையைப் பாதிக்கும். காரணம் மிக எளிது ! மூளைக்கு அதிக ஆக்சிஜன் தேவை. தலையை மூடிக் கொண்டே தூங்கினால், கரியமில வாயுவைத் தான் அதிகம் சுவாசிக்க வேண்டி வரும். அதனால் தான் காரணம். நல்ல காற்றோட்டமான, வெளிச்சமான, பச்சைப் பசேலென்ற உற்சாகச் சூழல்கள் மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.

12. உடல் நிலை சரியில்லாதபோதோ, சோர்வாய் இருக்கும் போதோ மூளைக்கு அதிக வேலை கொடுப்பதும் மூளையை வலுவிழக்கச் செய்யும். எனவே மூளைக்கு ஓய்வு தேவைப்படும் போது ஓய்வு கொடுப்பதே மிகவும் தேவையானதாகும்.

13. நல்ல சிந்தனைப் பயிற்சிகளைக் கொடுப்பது மூளைக்கு நல்லது. நேர் சிந்தனைகள், உற்சாகமான சிந்தனைகள் போன்றவை மூளையை உற்சாகமூட்டும். அதே நேரத்தில் எதிர்மறை சிந்தனைகளை அசை போட்டுக் கொண்டிருந்தீர்களெனில் உங்கள் மூளையின் அணுக்கள் செத்துக் கொண்டிருக்கும்.

               மூளையைப் பாதுகாப்பது வாழ்க்கையைப் பாதுகாப்பது போல. கவனமுடன் கையாள்வோம் வாழ்க்கையையும், மூளையையும்.

`பறக்கும் தட்டு’ உண்மையா?.....



                    ஆங்கிலத் திரைப்படங்களில் நீங்கள் `பறக்கும் தட்டை’ பார்த்திருக்கலாம். ஆகாயத்தில் எங்கிருந்தோ அது பறந்துவரும். நெருப்பு அல்லது வெளிச்சத்தைக் கக்கியபடி கீழே இறங்கும். அதிலிருந்து விசித்திரமான மனிதர்கள் வெளிப்படுவார்கள். அவர்கள் தங்களை வெளிக்கிரகவாசிகள் என்று கூறிக்கொள்வார்கள்.

                   ஆனால் உண்மையில் பறக்கும் தட்டு என்று எதுவுமே கிடையாது. மேலைநாடுகளில், பறக்கும் தட்டு பற்றிய செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளில் வெளிவருவதுண்டு. நம் நாட்டிலும் கூட அப்படிப்பட்ட செய்திகள் திடீரென வெளியாகும். `இந்த ஊரில் பறக்கும் தட்டு தெரிந்தது’ என்று பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதுவார்கள். வானில் இப்படி பறக்கும் தட்டு போன்று தென்படுகின்ற பொருள், காஸ்மிக் கதிர் ஆய்வு, வானிலை ஆய்வு ஆகியவற்றுக்காக உயரே செலுத்தப்படும் பலூன்களாக இருக்கக்கூடும். மிக உயரத்தில் இருக்கின்ற இவற்றின் மீது ஒளி படும்போது, பறக்கும் தட்டு போன்று தோன்றும்.

                   பறக்கும் தட்டும் மர்மம் பற்றிய பல நூல்கள் மேலைநாடுகளில் வெளிவந்துள்ளன. அமெரிக்காவில் நீண்ட ஆய்வுக்குப் பிறகு, பறக்கும் தட்டு என்பது உண்மையல்ல என்ற முடிவுக்கு வந்தார்கள்.
பறக்கும் தட்டு அல்ல, வேறு எந்தக் கலம் மூலமும் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருவதற்கு வாய்ப்பே கிடையாது. நமது அண்டத்தில் பூமி போன்ற கிரகங்கள் நிறையவே உள்ளன. அவற்றில் ஒன்றிலிருநது மனிதனைப் போன்றவர்கள் வருவது என்றால் பல நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அப்படி நீண்ட பயணத்துக்கு வாய்ப்பே கிடையாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு `விசிட்’ செய்திருப்பது உண்மை, அவர்களின் வாகனம்தான் `பறக்கும் தட்டு’ என்று தீவிரமாக வாதிடுவோம் இருக்கிறார்கள். ஆக, விவாதம் தொடர்கிறது.
                        

Saturday, December 18, 2010

அட அப்படியா.................?

கொஞ்சம் அறிவியலை பற்றி தெரிஞ்சுக்கோங்க...............................

1.       உலக உயிரினங்களின் வகைகள்................

  •        வைரஸ்கள்         -      1000  வகைகள்
  •        பாக்டீரியாக்கள்   -      3060  வகைகள்
  •        பாசிகள்                 -      26960 வகைகள்   
  •        தாவரங்கள்          -      248428  வகைகள்
  •        நட்சத்திர மீன்கள்  -     6100    வகைகள்
  •        பூச்சிகள்                -      751000   வகைகள்
  •        மீன்கள்                 -       19056   வகைகள்
  •        ஊர்வன                -      6300   வகைகள்
  •        பறப்பன                -      9040   வகைகள்
  •        பாலூட்டிகள்       -      4000    வகைகள்

2.      காற்றின் வகையை எப்படி அளவிடுகிறார்கள் தெரியுமா?

  •        மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வீசுவது   -   மென்காற்று.
  •        6 முதல் 11 கி.மீ வரை.......   இளம் காற்று.
  •        15 முதல் 19 கி.மீ வரை......   தென்றல் காற்று.
  •        20 முதல் 29 கி.மீ வரை......   புழுதிக் காற்று.
  •        30 முதல் 39 கி.மீ வரை......  ஆடிக் காற்று.
  •        40 முதல் 100 கி.மீ வரை......  கடும் காற்று.
  •        101 முதல் 120 கி.மீ வரை......   புயல் காற்று.
  •        120 கி.மீ மேல் வீசுவது......   சூறைக் காற்று.

3.      புல் (Grass) பற்றி............

      புல்லில் மொத்தம்70 முதல் 80 சதவீதம் வரை தண்ணீர் உள்ளது. உலகில் ஏறக்குறைய 10 ஆயிரம் வகையான புற்கள் பூமியின் பரப்பளவை 20% அளவுக்குச் சூழ்ந்திருக்கின்றன. சில புற்கள் மீண்டும் மீண்டும் தழைக்கின்றன.எனவே, அவை 100 ஆண்டுகளைத் தாண்டியவையாக உள்ளன. பூமியிலேயே மிகவும் கடுமையான சூழலைத் தாங்கக்கூடியவை புற்கள்தான்.பல்வேறு பூச்சிகள், பறவைகள், விலங்குகளுக்குப் புல் உணவாக இருக்கிறது.

Friday, December 17, 2010

கூகுள் குரோம் ஓ.எஸ் பற்றி...........




 

                     [ கணினி உலகின் இன்றைய ஜாம்பவான் பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட்! காரணம், மைக்ரோசாப்டின் விண்டோஸ் மற்றும் விண்டோசின் சமீபத்திய வரவான விண்டோஸ் 7 வரையிலான ஓ.எஸ் எனப்படும் செயலம் (ஆபரேட்டிங் சிஸ்டம்) மற்றும் இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் என்னும் இணைய வலையோடியும் தான். ஆனால், இன்றைய கணினி உலகத்தையும், இணையத்தையும் ஆள்வது ஓ.எஸ் அல்ல என்பது தான் ஆச்சரியமான ஆனால் நிதர்சன உண்மை!
                        ஓ.எஸ் எனப்படும் கணினி செயலம் என்னும் மென்பொருள் கணினியின் பயன்பாடுகள் அனைத்தும் இணையம் சம்பத்தபடாதது. அதாவது, அலுவலகம், கல்வி, ஆராய்ச்சி, கணிதம் என பல்வேறு வேலைகள் சம்பத்தப்பட்டது. ஆனால் இன்றைய கணினி உலகில் நமது கணினியின் மென்பொருள்கள், இடம் போன்றவற்றின் அவசியம் இன்று மிகக்குறைந்து விட்டது என்பது தான். அதனால் இன்றைய கணினி உலகம் வாழ்வது ''மேகக் கணினினீயம்'' எனும் "cloud computing" என்பதில் தான்.
                   இன்றைய கணினி உலகை ஆள வேண்டுமென்றால் "cloud computing" எனும் ''மேகக் கணினினீயம்'' என்னும் தொழிட்நுட்பத்தில் வல்லுனராக இருக்க வேண்டும். இந்த துறையில் இன்று கோலோச்சி கொண்டிருக்கும் கூகுல் தான் இன்றைய இணையத்தின் கதாநாயகன்! காரணம், கூகுல் இதுவறை இணையத்தேடலில் மட்டுமே ஆர்வம் காட்டிக்கொண்டிருந்ததது. ஆனால், எதிர்காலத்தில் - சொல்லப்போனால் இன்னும் சில மாதங்களில் கூகுளின் ஓ.எஸ்ஸான கூகுல் குரோம் ஓ.எஸ் மைக்ரோசாப்ட்டின் வின்டோஸ் 7- ஐ தூக்கி சாப்பிட்டு இணையத்தை ஆளப்போகிறது! ]
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் முற்றிலும் புதிய ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய திறன் கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கூகுள் 'குரோம்' என்ற பெயரில் சென்ற நவம்பர் 19ல் வெளியிட்டது. இதன் சோர்ஸ் கோட் எனப்படும் கட்டமைப்பு வரிகளை தன்னுடைய இணைய தளத்தில் கூகுள் வெளியிட்டுள்ளது. பொது மக்கள் பயன்பாட்டிற்கு இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் கிடைக்க இன்னும் ஓர் ஆண்டு ஆகலாம்.ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றவுடன் அது ஒரு டிவிடியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்த அனைவருக்கும்,  இதன் கட்டமைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  
                                  குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனியாகக் கிடைக்காது. கம்ப்யூட்டர்களில், குறிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களில் பதிந்து கிடைக்கும். எப்படி மொபைல் போனில் நாம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிக்காமல், அதில் பதிந்து வருவதனைப் பயன்படுத்துகிறோமோ, அதே போல குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து வரும் கம்ப்யூட்டர்கள் விற்பனைக்கு வரும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாடு பெரும்பாலும் இன்டர்நெட்டைச் சார்ந்து இருப்பதனை உணர்ந்த கூகுள், வாடிக்கையாளர்களுக்கு அதன் வழியிலேயே முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டினையும் தரும் வகையில், குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உருவாக்கியுள்ளது.
                         இந்த சிஸ்டத்தை இயக்கியவுடன் இன்டர்நெட்டில் இணைந்து, உங்களுக்கு என்ன பயன்பாடு வேண்டும் என்கிற ஆப்ஷன் கேட்கப்படும். டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட், அனிமேஷன், இணைய தளம், ஆடியோ வீடியோ எடிட்டிங் இன்னும் பல செயல்பாடுகள் பட்டியலிடப்பட்டு நீங்கள் எது வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கலாம். அதற்கான அப்ளிகேஷன் சாப்ட்வேர் உங்களுக்குத் தரப்படும். நீங்கள் தேவையான பைல்களை உருவாக்கலாம்.
                      ஏற்கனவே உருவாக்கி இருப்பதனை எடிட் செய்திடலாம். பின் இவற்றை நீங்கள் விரும்பினால், கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க், சிடி அல்லது பென் டிரைவில் பதிந்து சேவ் செய்து வைக்கலாம். இல்லை என்றால் குரோம் சிஸ்டம் மூலம் பெறும் ஆன்லைன் ஸ்டோரேஜ் வசதியைப் பயன்படுத்தி சேவ் செய்திடலாம். இதனால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், குரோம் ஓ.எஸ். உள்ள ஒரு கம்ப்யூட்டர் மூலம் உங்கள் பைல்களை நீங்கள் எடிட் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து பைல்களைத் தயார் செய்தது போல அவற்றை உருவாக்கலாம்.
இதனால் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை நீங்கள் விலை கொடுத்து வாங்கி உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கத் தேவையில்லை. எங்கே அவை கரப்ட் ஆகி, தக்க தருணத்தில் காலை வாரிவிடும் வகையில் கிராஷ் ஆகிவிடுமோ என்ற கவலை இல்லை. சேவ் செய்து வைக்க அதிகக் கொள்ளளவில் ஹார்ட் டிஸ்க் வாங்கிப் பொருத்த வேண்டியதில்லை. இவற்றை எல்லாம் குரோம் ஓ.எஸ். மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
இதனால் எப்போதாவது ஒரு முறை பயன்படுத்தக் கூடிய அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை, உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்க வேண்டியதில்லை.
                           ஆன்லைனில் அனைத்தும் இயங்குவதால் வேகம், எளிமை, பாதுகாப்பு ஆகியன அடங்கியதாக நம் கம்ப்யூட்டர் அனுபவம் இருக்கும். குரோம் ஓ.எஸ். இயங்க 7 விநாடிகள் போதும். எதிர்காலத்தில் இந்த கால அவகாசம் இன்னும் குறையும்.
                          குரோம் ஓ.எஸ். முகப்பு தோற்றத்தில் குரோம் பிரவுசரைப் போலவே தோற்றமளிக்கும். கூகுள் அப்ளிகேஷன் சாஃப்ட்வேர் தொகுப்புகள் (டாகுமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷிட், கிராபிக்ஸ் போன்றவை) அனைத்தும் தனித்தனி டேப்களில் தரப்பட்டிருக்கும். எது வேண்டுமோ அதற்கான டேப்பினைக் கிளிக் செய்து பயன்படுத்தலாம்.
                           நம்மிடம் உள்ள மெமரி கார்டு, மொபைல் போன், கேமரா ஆகியவற்றை கம்ப்யூட்டரில் இணைத்து அவற்றில் உள்ள படங்கள், ஆடியோ வீடியோ பைல்களைக் கம்ப்யூட்டர் ஃபைல்களாக இயக்கலாம்.
இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை எப்படி வாங்கி இணைப்பது? தேவையே இல்லை. ''குரோம் சிஸ்டம் பதிந்த கம்ப்யூட்டர்'' என்று மட்டுமே கேட்டு வாங்க முடியும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனியே கிடைக்காது. இதற்காகக் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களிடம் கூகுள் நிறுவனம் பேசி வருகிறது. முதலில் குரோம் ஓ.எஸ். பதிந்த நெட்புக் கம்ப்யூட்டர்கள் மட்டுமே கிடைக்கும். பின் லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் கிடைக்கும். தற்போது டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் இடத்தில் லேப் டாப் கம்ப்யூட்டர்களும், லேப் டாப் இடத்தில் நெட்புக் கம்ப்யூட்டர்களும் இடம் பிடித்து மக்களிடையே பரவி வருகின்றன. எனவே தான் குரோம் ஓ.எஸ். முதலில் நெட்புக் கம்ப்யூட்டர்களில் தரப்பட இருக்கிறது.
                         இப்போது கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் விண்டோஸ், மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் எல்லாம் இணையம் பயன்பாட்டில் இல்லாத காலத்தில் தொடங்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு கிடைப்பவை. இப்போது எல்லாமே இன்டர்நெட் என்று ஆகிவிட்ட நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்க வேண்டும் என கூகுள் திட்டமிட்டு, குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வடிவமைத்துள்ளது.
                      மக்கள் தங்கள் கம்ப்யூட்டரில் எல்லாமே உடனே கிடைக்க வேண்டும் என எண்ணுகின்றனர். இமெயில் பார்க்க வேண்டும் எனில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இயக்கி, பிரவுசர் அல்லது இமெயில் கிளையண்ட் புரோகிராமை இயக்கி, இணைய தளத்தை அணுகி என அதிக நேரம் செலவழித்த பின்னரே இமெயிலைப் பெறுகின்றனர். இந்த தடைகற்களை நீக்கி வேகமாக இமெயிலைப் பெற்றுத் தருகிறது குரோம் ஓ.எஸ்.
வழக்கமான கம்ப்யூட்டர் பயன்பாட்டிலிருந்து, முற்றிலும் மாறுதல்களுடன், கவலையற்ற, அதி வேகமான, எளிதான கம்ப்யூட்டர் பயன்பாட்டினைத் தர இருக்கிறது குரோம் ஓ.எஸ். இந்த ஓ.எஸ். இப்போது பயன்பாட்டில் இருக்கும் கம்ப்யூட்டர்களுக்கும் அவற்றில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் மாற்றானது அல்ல. இதன் வழி தனி வழி.
                     எச்.பி., ஏசர், அடோப், லெனோவா, குவால்காம், டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ், ப்ரீ ஸ்கேல், இன்டெல் ஆகியவை இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து செயல்பட ஒத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
                      பில்கேட்ஸ் இது பற்றிக் குறிப்பிடுகையில் குரோம் ஓ.எஸ். லினக்ஸ் சிஸ்டத்தின் இன்னொரு வடிவம் போல இருக்கிறது. இதன் இயக்கம் குறித்து குறைந்த தகவல்களே வந்திருப்பதால், அது என்ன செய்திடும் என்று அறிய ஆர்வம் அதிகரிக்கிறது என்றார். குரோம் ஓ.எஸ். இலவசமா? என்ற கேள்விக்கு கூகுள் இன்னும் விடையளிக்கவில்லை. ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் இயங்குவதால் இலவசமாக அல்லது மிக மிகக் குறைந்த விலையில் இது கிடைக்கலாம். இதனால் அதிக விலை கொடுத்து வாங்கப்படும் விண்டோஸ் சிஸ்டத்திலிருந்து மக்கள் இதற்கு மாறலாம்.
குரோம் ஓ.எஸ். இலவசமாகத் தரப்படும் நிலையில், நிச்சயமாக அதில் விளம்பரங்கள் இடம் பெறலாம். குரோம் ஓ.எஸ். ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் உருவானதால், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டு இலவசமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அடுத்த ஆண்டில் குரோம் ஓ.எஸ். கம்ப்யூட்டர்கள் மிகச் சிறிய அளவில், சிறிய ஸ்கிரீன், டச் பேட், கீ போர்டு ஆகியவற்றுடன் கிளாம் ஷெல் கம்ப்யூட்டர்களாக வெளிவரலாம்.
                        குரோம் ஓ.எஸ். வழக்கமான ஹார்ட் டிஸ்க்குகளுக்குப் பதிலாக சாலிட் ஸ்டேட் டிஸ்க்குகளையே சப்போர்ட் செய்திடும். இதனால் மின்சக்தி குறைந்த அளவே பயன்படுத்தப்படும்; வேகம் அதிகரிக்கும்.
இயக்க வேகம் மிக மிகக் குறைந்த அளவில் இருக்கும். ஒரு பட்டனை அழுத்தியவுடன், கம்ப்யூட்டர் தயாராகி உங்களை இணையத்தில் இடம் பெறச் செய்திடும் குரோம் ஓ.எஸ்.
                    அனைத்துமே வெப் அடிப்படையிலான அப்ளிகேஷன் களாக இருப்பதால், நாம் எந்த சாப்ட்வேர் தொகுப்பையும் இன்ஸ்டால் செய்து, அப்டேட் செய்து பராமரிக்க வேண்டியதில்லை.
                    மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை
''டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்'' களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் தருவதில் நிலையான முதல் இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு குறைந்து வருகிறதே. அந்த இடத்தில் லேப்டாப் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்கள் கைப்பற்றி வருகின்றன. எனவே தான் கூகுள் நெட் டாப் கம்ப்யூட்டர்களில் தன் ஓ.எஸ். பயணத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் டெஸ்க்டாப் பழக்கத்தை மூடிவிட கூகுள் திட்டமிடுகிறது.
குரோம் ஓ.எஸ். குறித்து சுருக்கமாக
குரோம் ஓ.எஸ். குறித்து சுருக்கமாகச் சொல்வதென்றால், 1 வெப் பிரவுசர் இங்கே டெஸ்க் டாப் கம்ப்யூட்டராகச் செயல்பட உள்ளது. எல்லாமே இணையதளத்துடன் கூடிய தொடர்பாகவே அமையும்.
2.வழக்கமான பைல், போல்டர், டிரைவ் எல்லாம் இருக்காது. எல்லாமே இணையத்தில் சேர்த்து வைக்கப்படும். 3. குரோம் ஓ.எஸ். உள்ள கம்ப்யூட்டரில் ஷட் டவுண் பட்டன் இருக்காது. ஸ்லீப் மோடில் தான் இருக்கும். எனவே தொட்டவுடன் இயங்கத் தொடங்கி இணையத்தில் உங்களை அமர வைக்கும்.
4.கம்ப்யூட்டரில் எந்த சாப்ட்வேருக்கும் அப்டேட் தேவையில்லை. எல்லா அப்ளிகேஷனும் இணையத்திலிருந்தே நமக்குத் தரப்படுவதால், அப்போது தயாராக அப்டேட் செய்யப்பட்டுள்ள சாப்ட்வேர் தொகுப்புதான் பயன்படுத்தக் கிடைக்கும். 5. எதுவுமே கம்ப்யூட்டரில் ஸ்டோர் செய்யப்படமாட்டாது. எனவே வைரஸ் தாக்கி கெடுக்கும் என்ற சந்தேகத்திற்கு இடமே இல்லை. அதிக பாதுகாப்பான, கவலையற்ற கம்ப்யூட்டிங் சுகம் கிடைக்கும்.

விமானம் பறப்பது எப்படி?.............





                          இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்
பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.
                    சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது?!
              இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
              ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு.
             
ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift) முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் - Thrustகீழ்நோக்கி இழுக்கும் எடை - Weight பின்னோக்கி இழுக்கும் டிராக் - Dragஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்.Weight=Lift
Drag=Thrust
த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்.
                    டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்.
                     விமானத்தின் எடை
''லிப்ட்'' விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும். விமானத்தின் ''லிப்ட்'' விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும். சரிஸ பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்.அதே போல விமானத்தில் ''டிராக் விசையை கொடுப்பது'' காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.
              (பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)
                 விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது
ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்.
                    உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக  விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது
                 விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்
இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது
காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)
                     விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்
                 அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்ளதாக இருக்கும்
                        இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?
                   அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது)
இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆஃப் ஆகிறது
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?
                   அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது
                         ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.
                      மனிதனால் பறக்க முடிவும் என்பது பற்றி இறைவன் திருமறையில்,
''மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.டாது)'' அல்குர்அன் 55-33

Thursday, December 16, 2010

'ஹெர்ட்ஸ்'' என்றால் என்ன?




 
                           கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் பற்றிப் பேசுகையில் நாம் அடிக்கடி ''மெகா ஹெர்ட்ஸ்'' மற்றும் ''கிகா ஹெர்ட்ஸ்'' என்று பேசுகிறோம், படிக்கிறோம். இந்த ஹெர்ட்ஸ் எதனைக் குறிக்கிறது? ஏன் இந்த பெயர் வந்தது
                       ஹெர்ட்ஸ் என்பதனை சுருக்கமாக Hz என்று எழுதுகிறோம். இது Hertz என்பதன் சுருக்கம். இது ஜெர்மன் பிசிக்ஸ் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர். ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை மெட்ரிக் முறையில் அளந்திட இந்த பெயர் வைக்கப்பட்டது. ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு (ரேடியோ அலைவரிசையில்) கம்ப்யூட்டரைப் பொறுத்த வரை இது மானிட்டருடன் அதிகம் சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது.
                      சி.ஆர்.டி. மானிட்டர் (டிவி பெட்டி போல இருப்பது) அதன் ஸ்கிரீன் இமேஜை தொடர்ந்து காட்டாமல் விட்டு விட்டுத் தான் காட்டுகிறது. ஆனால் அதனை நாம் நம் கண்களால் பார்த்தால் கண் கெட்டுப் போகும். எனவே தான் விநாடியில் பலமுறை இது விட்டு விட்டுக் காட்டப்படுகையில் இடைவெளி தெரிவதில்லை. எடுத்துக் காட்டாக 85 Hz என்பதில் விநாடி நேரத்தில் 85 முறை இமேஜ் பின் வாங்கப்பட்டு மீண்டும் காட்டப்படுகிறது. அத்தனை முறை காட்டப்படுவதனாலேயே இமேஜ் அப்படியே நிலையாக நிற்பது போல நாம் உணர்கிறோம்.
மெஹா ஹெர்ட்ஸ் Mehahertz (MHz) ஒரு மெஹா ஹெர்ட்ஸ் என்பது பத்து லட்சம் சுற்றுகளாகும். அதாவது ஒரு விநாடியில் பத்து லட்சம் சுற்றுகள் ஏற்படுகின்றன. இது எப்படி ஏற்படுகிறது என்பதனை படமாகவோ அல்லது வேறு வழியாகவோ விளக்குவது கஷ்டம். கம்ப்யூட்டர் பிராசசரைப் பொறுத்தவரை மெஹா ஹெர்ட்ஸ் என்பது மிகவும் சாதாரணம். ஒரு கம்ப்யூட்டர் பிராசசர் உள்ளாக அமைந்த ஒரு கடிகார துடிப்பினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப்படுகிறது. எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பதுதான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் என அழைக்கப்படுகிறது. இந்த வேகம் மெஹா ஹெர்ட்ஸ் என்பதில் அளக்கப் படுகிறது.
                    முதலில் வந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் 4.77 மெஹா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசசர்களைக் கொண்டிருந்தன. அதாவது விநாடிக்கு ஏறத்தாழ 48 லட்சம் கிளாக் துடிப்புகள். தற்போதைய பெண்டியம் 4 கம்ப்யூட்டர் பிராசசர் 3.2 கிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டுள்ளன. (ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ்.) எனவே கணக்குப் போட்டு இந்த அதிவேக துடிப்புகளை உணர்ந்து கொள்க. கிஹா ஹெர்ட்ஸ் Gigahertz (GHz) கம்ப்யூட்டர் உலகில் இது கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ். தற்போது வரும் கம்ப்யூட்டர் பிராசசர் வேகம் இந்த அளவிலேயே சொல்லப்படுகிறது

முதல் நிலவுப் பயணத்தில் மறைக்கப்பட்டது என்ன?!......


Print E-mail
 
நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள், நிலவுக்கு செல்லும் முன் தாங்கள் உயிருடன் திரும்புவது சந்தேகம் என்ற நிலையிலேயே பயணத்தை தொடங்கினர். இதற்காக தங்கள் உயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய முயன்றபோது எந்த நிறுவனமும் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை. கிரேய்க் நீல்சன் என்பவர் விண்வெளி பற்றி 'ராக்கெட் மேன்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிட்டு உள்ளார். அந்த புத்தகத்தில் மனிதனின் நிலவுப் பயணத்தில் மறைக்கப்பட்ட சில விஷயங்களையும், மறக்க முடியாத சம்பவமாக விண்வெளி வீரர்கள் கூறியதையும் தொகுத்துக் கூறி உள்ளார். 41 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் முதன் முதலில் நிலவில் கால்பதித்தான். அமெரிக்காவைச் சேர்ந்த நீல்ஆம்ஸ்ட்டிராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய 3 விண்வெளி வீரர்களும் 1969ம் ஆண்டு ஜுலை மாதம் 21-ந்தேதி நிலவில் இறங்கினார்கள். பரபரப்பாக பேசப்படும் 'ராக்கெட் மேன்' புத்தகத்தில் சுவாரசியமான விஷயங்கள் இதோ... திட்டமிட்டபடி இறங்காத விண்கலம்1. விண்வெளி வீரர்கள் சென்ற அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சிறிது தூரத்தில் சென்றபோது சிறு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இதனால் திட்டமிட்ட இடத்தில் இறங்க முடியாமல்போனது. 31/2 மைல் தொலைவுக்கு அப்பால் சென்று இறங்கியது.2. அப்போது விண்கலத்தில் பயன்படுத்திய கம்ப்யூட்டர் தற்போது இருக்கும் செல்போன் அளவு வேகம் கூட இருக்கவில்லை. 3. குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட வேண்டியதாக இருந்தது. ஏனெனில் எரிபொருளுடன் சம்பந்தப்பட்டு வடிகட்டியே பெறப்பட வேண்டியதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் இந்த ஏமாற்றம் நிகழ்ந்தது. அதேபோல் சிறுநீர் கழிப்பது, மலஜலம் கழிப்பது போன்றவற்றுக்கும் மிகுந்த சிரமப்பட வேண்டியதாக இருந்தது. இதனால் மலஜலத்தை நிறுத்தி வைப்பதற்காக விண்வெளி வீரர்கள் மருந்து சாப்பிடும் நிலைக்கு ஆளாகினர்.  4. அதேபோல் பெரிய விண்கலத்தில் இருந்து ஈகிள் எனப்படும் குட்டி விமானம் மூலம் நிலவில் தரை இறங்கினார்கள். ஈகிளிலும் பிரச்சினை ஏற்பட்டதால் 4 மைல் தூரத்துக்கு அப்பால்தான் தரை இறங்க முடிந்தது. 5. நீல் ஆம்ஸ்டிராங் ஈகிள் மூலம் நிலவில் இறங்கும்போது அது ஏறக்குறைய எரிபொருள் தீர்ந்து நிலவின் தரையில் மோதுவதுபோல சென்றது.  
6. நிலவில் காலடி வைத்ததை 'மனிதனின் சிறிய அடி' என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அதுசிறிய அடியாக இருக்கவில்லை. அவர் ஈகிளின் ஏணிப்படியிலிருந்து 3.5 அடி தாவித்தான் நிலவில் கால் வைத்தார். 
7. ஆம்ஸ்டிராங்கை தொடர்ந்து ஆல்ட்ரின் இறங்கினார். அப்போது ஈகிள் விண்கலத்தின் கதவை பூட்ட முடியாமல் சிரமப்பட்டார். ஏனெனில் அதை வெளியில் இருந்து பூட்டும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. கொடியை நடுவதில் சிரமம்8. நிலவில் இறங்கும் முன்பு நடந்திருந்த ஆய்வுப்படி நிலவின் மணல் மிருதுவாக இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் நிலவில் இறங்கிய பிறகுதான் கடினமாக இருந்தது தெரியவந்தது. மனிதன் இறங்கிய இடம் முழுவதும் பாறையாக இருந்தது. இதனால் கொடியை நடுவதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள்.  
9. நிலவில் நட்ட அமெரிக்கக் கொடி விறைப்பானதாக இருந்தது. ஆனால் அதை நாசா நிறுவனம் மறுத்துவிட்டது. 
10. விண்வெளி ஆடை, அங்குள்ள சூழலுக்கு ஏற்ற கம்ப்யூட்டர் சிப் அனைத்தும் "லிட்டில் ஓல்டு லேடிஸ்'' என அழைக்கப்படும் குழுவினரால் கையால் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த விஷயங்கள் அனைத்தையும் நாசாவின் கருவூலத்தில் இருந்து சேகரித்து தொகுத்து உள்ளார்.நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள், நிலவுக்கு செல்லும் முன் தாங்கள் உயிருடன் திரும்புவது சந்தேகம் என்ற நிலையிலேயே பயணத்தை தொடங்கினர். இதற்காக தங்கள் உயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய முயன்றபோது எந்த நிறுவனமும் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை.
இதனால் தங்களின் நினைவுச் சின்னங்களாக சில பொருட்கள், ஓவியங்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டே விண்வெளி வீரர்கள் பயணத்தை தொடங்கினர். இந்த விஷயங்கள் ஏற்கனவே விண்வெளி வீரர்களால் வெளிப்படுத்தப்பட்டு பல நூல்களில் இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, December 5, 2010

கிரிக்கெட்டில் வாழ்க்கை

              வாழ்க்கை என்பது ஒரு வட்டம் மாதிரி. இதில் ஜெயிப்பவன் தோற்பான் ,தோற்பவன் ஜெயிப்பான்.இது இளைய தளபதி விஜய் சொன்னது. ஆனால் நான் என்ன சொல்றன் தெரியுமா?கொஞ்சம் கீழ பாருங்க.......

              $ வெற்றி என்பது "சென்சுரி" போன்றது-அடித்துவிடுங்கள்
.
              $ பிரச்சனை "யார்க்கர்" போன்றது-எதிர்கொள்ளுங்கள்
.
              $ தோல்வி என்பது "பவுன்சர்" மாதிரி-விட்டுவிடுங்கள்.

              $ அதிர்ஷ்டம் என்பது "ஃபுல்டாஸ்" போன்றது-பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

               $ சந்தர்ப்பம் என்பது "ஃப்ரீ ஹிட்" மாதிரி-ஒரு போதும் விட்டுவிடாதீர்கள்.
                 
                    இதையெல்லாம் சரியாகச் செய்தால் "வாழ்க்கை" என்ற ஆட்டத்தில் நீங்கள்தான் "மேன் ஆஃப் தி மேட்ச்" .