ஏலியன்ஸ் தேடல் பற்றிய சுவையான பல விஷயங்களில் சிலவற்றை இங்கு அறிமுகப்படுத்தாமல் விட்டிருக்கிறேன். உதாரணமாக:
- ஏலியன்ஸ் தேடல் அறிவியலா புரட்டா?
- பெர்மி பாரடாக்ஸ் - சில தீர்வுகள்
- மறைமுகத் ஏலியன்ஸ் தேடல்
- எக்ஸோ கிரகங்கள்
- நேனோ புரோபுகள் – வைரஸ்கள் மூலம் அறிதல்
- ஏலியன் மேஜிக் - தொழில்நுட்ப விளைவுகளின்மூலம் கண்டறிதல்
- கர்டஷாவ் அளவையும், டைசன் உருளையும்
- விஞ்ஞானப்புனைவுகளுக்கு அப்பால்
- விண்வெளிப்பயணம் - விஞ்ஞானமும் விஞ்ஞான புனைவுகளும்
புத்தகத்தின் முதல் மாதிரிவடிவம் தயார்.
ஆனால், ஏலியன்ஸ், அறிவியல் என்பதெல்லாம் வெறும் அறிவுத்துறை. நான் எழுதுவதை எழுதுவேன் முடிந்தால் புரிந்துகொள், இல்லை ஒதுங்கு என்று இதை இலக்கியத்திற்கொப்பாய் தடாலடிக்க எனக்கு பிரியமில்லை. அறிவியலை படித்து புரிந்துகொள்ள ஒரளவாவது முயற்சி எடுக்கும் வாசகர்களுக்காவது, அவர்கள் சந்தேகங்கள் தீரவேண்டும், புரிதல் மேம்படவேண்டும்.
ஆகையால், Writing 2.0 வகையில் இணையத்திலேயே புத்தகத்தை எழுத முயல்வதால் வரும் வசதியை உபயோகிப்போமே. இங்கு படித்துக்கொண்டிருக்கும் வாசகர்களுக்கு வேண்டுகோள்:
ஏலியன்ஸ் தேடல், அதன் அறிவியல் பற்றிய உங்கள் சந்தேகங்களை இந்த பதிவின் மறுவுரையாக எழுதுங்கள். சந்தேகம் எவ்வளவு எளிமையானதாக இருந்தாலும் சரி. கேளுங்கள். Readers pulse என்பார்களே, அதை கைபடாமல் பிடித்து பார்த்துக்கொள்ள எனக்கு உதவும். புத்தகத்தின் விளக்கங்களை மாற்றியமைப்பேன், செம்மையாக்குவேன். மேலும், புத்தகத்தில் ஒரு பகுதியை இக்கேள்விகளுக்கான பதில்களுக்கு ஒதுக்கியிருக்கிறேன்.
(எனக்கு பதில் தெரியாத கேள்வின்னானும் கமெண்ட் பிரசுரமாகும். பதில்... புத்தகம் வருவதற்குள் அடியேனால் ஏலியப்பயல்களிடமிருந்து நேரடியாக கண்டறியப்படும்...ஹி, ஹி...)

No comments:
Post a Comment