Wednesday, December 1, 2010

அறிவியல் கண்டுபிடிப்புகளின் மைல்கற்கள் (கிமு. 2000 முதல் கி.பி. 2000 வரை)


கி.மு. 2000 - பாபிலோனியர்கள் ஆண்டு கணக்கீடு ஏற்படுத்தியது.
1216 _ வானிலை குறித்த சீன ஆய்வுகள்
736_ சூரிய கிரகணம் பாபிலோனியாவில் பதிவு செய்யப்படுதல்
560 _ பித்தக் கோரஸ் கணிதவியல் இந்தியா _ சீனாவில் கணிதவியல் வளர்ச்சி.
530 _ அறிவியல் நோக்கங்களுக்காக மனித உடல் அறுவை செய்யப் பட்டது.
322 _ அரிஸ்டாட்டில் பிரபஞ்சம் பற்றி உரைத்தது
250 _ ஆர்கிமிடீஸ் காலம் _ நெம்புகோல் தத்துவம் வெளியிடப்பட்டது.
200 _ ஆயுர்வேத மருத்துவமுறை தோற்றம்; சீன மருத்துவம் தாவரக் கோட்பாடுகள் வளர்ச்சி.
கி.பி. 2000
23_79_ பிளைனி வாழ்ந்த காலம் (இயற்கை வரலாறு என்ற நூல் எழுதியவர்)
170 _ கிரேக்கத்தில் புவிமய்ய வானவியல் வளர்ந்த காலம்
500 _ ஆரிய பட்டரின், கணிதவியல் வானியல் கண்டுபிடிப்புகள்
1000_ வெடி மருந்து. ராக்கெட் ஆகிய-வற்றை சீனர்கள் கண்டுபிடித்தனர்.
1200 _ இரண்டாம் பாஸ்கரர் கோளக் கணிதவியல் கண்டறிதல்
1400 _ ஒரு சூரிய வருடத்தின் மொத்த காலம் 365.25 நாட்கள் என சீனர்கள் கணக்கிட்டது.
1440 _ அச்சுக்கூட எந்திரம் கண்டறிதல்
1449_1492 மறுமலர்ச்சிக் காலத்தின் வளர்ச்சி
1470_ கடிகாரத்தின் சுருள் கண்டுபிடிப்பு
1492_ கொலம்பஸ் கடல் பயணம்
1497_ வாஸ்கோடா காமா கடல் பயணம்
1504_ கைக் கடிகாரம் கண்டறிதல்
1543_ கோபர் நிக்கஸ் சூரிய மய்ய வானியல் கொள்கையை வகுத்தல். மனித உடல் கூறு பற்றிய அறிவி-யல் வளர்ச்சி, வால் நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வு வளர்ச்சி.
1561_1629 நவீன அறிவியலின் முறையியலை உருவாக்கிய பிரான்ஸிஸ் பேகன் வாழ்ந்த காலம்
1581_ கலிலியோவின் ஆய்வுகள்
1596_ ரெனே டெஸ்கரத் (Descrates) வடிவக் கணிதவியல் வளர்த்தல்; அறிவியல் முறையி-யலுக்கு பங்களிப்பு.
1597_ முதல் வேதியியல் நூல்
1600_ இதயம் பற்றிய ஆய்வு
1608_ தொலைநோக்கி கண்டறிதல்
1609_ கெப்ளரின் விதிகள் கண்டறிதல்; கலிலியோவின் பால்வெளி ஆய்வுகள்
1627_ கோள்களின் அட்டவணை கெப்ளரால் வெளியிடப்படுகிறது.
1628_ வில்லியம் ஹார்வி _ இரத்த ஓட்டம் பற்றி அறிதல்
1644_ டாரிசெல்லி _ அழுத்த மானியை ஆக்குதல்
1658_ இரத்த சிவப்பணுக்கள் அறியப்-படுதல்
1660_ நிலை மின்களம் கண்டறிதல்
1669_ நியூட்டன் ஆய்வுகள்; இயந்திர-வியல் வளர்ச்சி
1676_ நுண்ணுயிரிகளை ஆராயும் நுண்ணோக்கி கண்டுபிடிப்பு.
1678-_ ஒளி துகள்களால் ஆனது என நியூட்டன் விளக்குதல்
1684_ புவியின் சரியான அளவு அறியப்-படுதல்
1687_ நியூட்டனின் இயக்கம் பற்றிய நூலை விளக்கும் நூல் (Principle mathematics) வெளியிடப்படுதல்
1709_ இரும்பு தொழில் நுட்பம் அய்ரோப்-பாவில் வளர்தல் தொழில் புரட்சியின் துவக்கம்
1712_ நீராவி எந்திரம் செயல்படத் துவங்கியது.
1714_ பாரன்ஹீட் பாதரச வெப்ப-மானியைக் கண்டுபிடித்தல்
1745_ வால் நட்சத்திரம் சூரியனோடு மோதியதால் புவி தோன்றியது என பூஃபன் எடுத்துரைத்தல்
1746_ வில்லியம்வாட்சன் மின்சாரம் பற்றிய நூல் இயற்றுதல்.
1748_ மைகேல் லாமகோவ் ஆற்றலின் பாதுகாப்பு பற்றிய விதியை வெளி-யிடுதல்
1751_ பெஞ்சமின் பிராங்மின் _ மின்-சாரம் பற்றிய நூலை வெளியிடுதல்
1754_ புலன்கள் மூலம்தான் அறிவு பெறப்படுகிறது என்று பானெட் நிறுவுதல்
1766_ ஹைட்ரஜனைக் கண்டுபிடித்தல்
1769_ ஜேம்ஸ்வாட் முதல் நீராவி எந்தி-ரத்தை கண்டுபிடித்தல்
1772_ ரூதர்போர்டு நைட்ரஜனை கண்டு-பிடித்தல்
1783_ டங்ஸ்டன் கண்டுபிடிப்பு
1784_ நீர் இரண்டு வாயுக்களின் கலவை என்று கண்டறியப்படுதல்
1785_ துணி நெய்யும் இயந்திரம் (Power machine) கண்டுபிடிப்பு
1796_ அம்மை நோய் தடுப்பு முறை (Vaccination) கண்டுபிடிப்பு
1800_ மின்கலம் வோல்டாவால் உருவாக்கப்படுதல்
1803_ ஜான் டால்டன் அணுக்கொள்-கையை வெளியிடுதல்
1827_ ஓம் விதி வெளியிடப்படுதல்
1830_32 மின்காந்த தூண்டலை கண்டறிதல் மின் இயற்றியை (Generator) உரு-வாக்குதல்
1842-_ டாப்ளர் விளைவு கண்டுபிடிக்கப்-படல்
1853_ ஜெர்மனியின் நியாண்டர் சம-வெளியில் நியாண்டர்தால் மனித எலும்புக்கூடு கண்டறியப்படுதல்
1856-_ லூயி பாஸ்டர் கிருமி நீக்க முறையைக் கண்டறிதல்
1858_59 டார்வின் பரிணாமக் கொள்கை வெளியீடு; (Origin of Speicies) நூல் வெளியிடப்படுதல்
1863_ புவி, நட்சத்திரம் ஆகியவற்றில் உள்ளவை தனிமங்களே என வில்லியம் ஹக்கின்ஸ் நிறுவுதல்
1865_ மெண்டலின் விதிகள் வெளியிடப்-படுதல்
1876_ அலெக்சாண்டர், கிராகாம்பெல் தொலைபேசி காப்புரிமை செய்தல்
1877-_ தாமஸ் ஆல்வா எடிசன் கண்டு-பிடிப்பு (மின்விளக்கு)
1888_ ரேடியோ அலைகள் கண்டுபிடிப்பு
1890_ எடிசன் _ முதல் சினிமா படம் உரு-வாக்குதல்
1897_ உயிர் வேதியியல் (எட்வர்ட் புக்னர்) துறை துவக்கம். மேரி கியூரி கதிரியக்கத்தைக் கண்டறிதல் ரூதர்போர்டு ஆல்பா_ பிட்டா கதிர்களை கண்டறிதல்
1898_ கியூரி தம்பதி ரேடியத்தைக் கண்-டறிதல் ஜே.ஜே. தாம்சன் அணு-வின் மாதிரியை உருவாக்கினார்.
1903_ ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தனர்.
1905_ ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் சிறப்பு சார்பியல் கொள்கை வெளியிடப்-படுதல்.
1906_ வைட்டமின்கள் கண்டுபிடிப்பு
1909_ மரபணு (ஜீன்) பற்றிய முதல் விளக்-கம் யோசான்சன் 1911_ அணுக்கருவை ரூதர்போர்டு கண்-டறிதல்
1913_ தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு எண்களால் நிர்ணயிக்கப்-படுகின்றன, எடைகளால் அல்ல என்று நிறுவுதல்
1916_ அய்ன்ஸ்டீன் பொதுச் சார்பியல் கொள்கையை உருவாக்குதல்
1920_ அணுவில் நியூட்ரான்கள் இருப்-பதை ரூதர்போர்டு வெளியிடுதல்
1928_ பென்சிலின் கண்டுபிடிப்பு
1932_ கன ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு
1933_ எலக்ட்ரான் நுண்ணோக்கி கண்டு-பிடிப்பு
1934_ அணு இணைவுக் கொள்கையை ரூதர்போர்டு உருவாக்குதல்
1935_ ராடார் கண்டுபிடிப்பு
1942_ முதல் அணு உலை நிறுவப்-படுதல்.
முதல் கணினி உருவாக்கப்படுதல்
மரபணு கொள்கை விரிவாக்கப்-படுதல்
1947_ டிரான்சிஸ்டர் கண்டுபிடிப்பு
1948_ பெரு வெடிப்புக் கொள்கை விளக்கம்
1952_ முதல் ஹைட்ரஜன் இணைவு வெடிகுண்டு அமெரிக்காவில் சோதனை
1953_ டி.என்.ஏ (DNA) வடிவம் விளக்கப்படுதல்
1957_ ஸ்புட்னிக் விண்கலம் சோவியத் நாடு ஏவுதல் -_ விண்வெளி அறி வியலின் மைல்கள்
1960_ யூரிககாரின் (சோவியத்நாடு) விண்கலத்தில் சுற்றி வருதல்
1964_ குவார்க் கொள்கை விளக்கம் பெறுதல்
1966_ மரபணு சங்கீதம் (enetic code) வெளியிடப்படுதல்.
1967_ ஒரு தனி மரபணுவை (Gene) முதன் முதலில் பிரித்தெடுத்தல்
1969_ நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் தரையிறங்குதல்
1970_ முதன் முதலில் மரபணு செயற்கை முறையில் உருவாக்கப்படுதல்; மரபணு பொறியியல் துறையில் அடிப்படை ஆய்வுகள்
அய்.நா. முயற்சியால் சுற்றுச் சூழலியல் அறிவியல் தோற்றம்
1976_ வைகிங் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது
1980_ அணுவின் ஒளிப்படம் முதன்-முதலில் வெளியிடப்படுதல்
1980_81 கிவீபீ நோய் கண்டறியப்படுதல்
1985_ ஓசோன்படலம் ஓட்டை விழுந்தது குறித்தாய்வு
1995_ இணைய தளத்தின் அறிமுகம்
2000_ மரபணுப் புரட்சி

ஹைசன்பர்க் விதி அல்லது தத்துவம் என்பது குவாண்டம் இயற்பியலில் ஒரு அடிப்படை தத்துவம். இதை ஆங்கிலத்தில் ”Heisenberg Uncertainity Principle" என்று சொல்வார்கள். இதைப் பற்றிய சில விவரங்களைப் பார்க்கலாம்.

Uncertainity என்பதை ‘நிச்சயமற்ற' என்று மொழிபெயர்க்கலாம். இதைவிட சிறப்பான் வார்த்தை தெரிந்தால் சொல்லவும், மாற்றி விடலாம். ஜெர்மனியை சேர்ந்த வெர்னர் ஹைசன்பர்க் என்பவர் இதை கண்டுபிடித்தார். இவர் 1927ல் இந்த தத்துவத்தை கண்டு பிடித்தார்.அப்போது இவருக்கு வயது 26 ஆகும். இந்த கண்டுபிடிப்பிற்காக 1932ல் , 31 வயதில் நோபல் பரிசு கிடைத்தது.

இவர் 1929ல் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். ஆனால் அதுபற்றிய வேறு விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை. 1933ல் ஹிட்லர் ஜெர்மனியை ஆட்சி செய்த சமயம். இவர் புரோமஷன் வரும்பொழுது நாஜி SS இடையூறு செய்து தடுத்து விட்டது. இவர் கிறிஸ்துவர் என்றாலும் ‘யூத மனப்பான்மை கொண்டவர்' என்று வேறு ஒரு பத்திரிகை எழுதியது. ஆனால், அதற்கு அப்புறம் வேறு தொந்தரவு கொடுக்கவில்லை.

பிறகு 1939ல் இரண்டாம் உலகப் போரின்பொழுது, ஜெர்மனி அணு ஆயுதம் தயாரிக்க முயற்சி எடுத்தது. அதில் இவரும் இயற்பியல் அறிஞர் என்ற முறையில் பங்கெடுத்தார். அமெரிக்கா போரில் வென்ற பிறகு, 1945 மே மாதம் முதல் 1956 ஜனவரி வரை இங்கிலாந்தில், வீட்டுச் சிறை போல ஒரு பண்ணை வீட்டில், சிறை வைக்கப்பட்டார். இவரது நேரம், ஜெர்மன் அதிகாரிகளிடம் இருந்தும் தொல்லை, ஆங்கிலேயர்களிடம் இருந்தும் தொல்லை! பிறகு விடுதலை செய்யப்பட்ட பிறகு, ஜெர்மனிக்கே திரும்ப வந்து, இய்ற்பியல் துறையில் பல ஆராய்ச்சி மையங்களுக்கு (research instituteகளுக்கு) தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார். இறுதியில் 1976ல், 74 வயதில் கான்சரால் இறந்தார்.


சரி, ஆளைப் பற்றிய கதை படிச்சாச்சு, இவரது தத்துவம் என்ன சொல்கிறது? நாம் நமது அனுபவத்தில் “எந்த ஒரு பொருளை எடுத்தாலும், அது எந்த இடத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியும். அது எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்று சொல்ல முடியும். அல்லது அந்தப் பொருள் அசையாமல் அப்படியே இருக்கிற்து என்று கூட சொல்ல முடியும்.” என்று நினைக்கிறோம். அதை மிக மிகத் துல்லியமாக சொல்ல முடியும் என்றும் நினைக்கலாம்.

ஒரு பொருளின் திசை வேகத்தையும் (velocity), நிறையையும் (mass) பெருக்கினால் வருவது ‘உந்தம்' என்று சொல்லப்படும். ஆந்திலத்தில் இது 'momentum' ஆகும். பொருளின் நிறையை மிகத் துல்லியமாக சொல்ல முடியும். அது மாறாதது
குறிப்பு:
  • சார்பியல் கொள்கை என்ற ரிலேடிவிடி/relativity படி நிறை மாறக்கூடியது. குவாண்டம் இயற்பியலின் அடிப்படையில் நிறை மாறாதது. இங்குதான் இந்த இரண்டு தியரிகளையும் ஒத்துப்போகச் செய்ய முடியவில்லை


சரி, இப்போதைக்கு, ஒரு பொருளின் நிறை மாறாதது என்று வைத்துக் கொள்வோம். அதன் திசைவேகத்தை துல்லியமாக அளக்க முடிந்தால், அந்தப் பொருளின் ‘உந்தம்' எவ்வளவு என்பதை துல்லியமாக சொல்ல முடியும் இல்லையா? அந்தப் பொருள் அசையாமல் இருக்கிறது என்றால், அதன் திசைவேகம் பூஜ்யம் என்று சொல்லலாம். அதன் உந்தமும் பூஜ்யம்தான்.

ஆனால், ஹைசன்பர்க் கொள்கைப் படி ஒரு பொருளின் இடத்தையும், உந்தத்தையும் மிக மிக துல்லியமாக சொல்ல முடியாது. இந்த இரண்டு விஷயங்களையும் ஒரே சமயத்தில் (simultaneously) அளந்தால் அதில் சில inaccuracy என்ற ‘கொஞ்சம் முன்னால் பின்னால்' என்று சொல்லக் கூடிய தவறுகள் இருக்கும். இடத்தை துல்லியமாக சொன்னால், உந்தத்தை துல்லியமாக சொல்ல முடியாது. உந்தத்தை துல்லியமாக சொன்னால், இடத்தை துல்லியமாக் சொல்ல முடியாது என்று சொன்னார். இதற்கு ஒரு சமன்பாடும் கொடுத்தார். இது del-X * del-M > h என்று சொல்லப்படும்.

இதில் del-X என்பது இடத்தில் இருக்கும் ‘தவறு'. எடுத்துக்காட்டாக, ”இந்தப் பொருள் இருக்கும் இடத்தை கணிக்கும்பொழுது 1 மி.மீ. முன்ன பின்ன இருக்கலாம், ஆனா அதைவிட மோசமாகாது” என்று சொல்லலாம். del-M என்பது, அதன் உந்தத்தில் இருக்கும் தவறு. இந்த இரண்டையும் பெருக்கினால் வரும் 'மொத்த தவறு' h என்ற ஒரு constant ஆகவோ அல்லது அதைவிட அதிகமாகவோதான் இருக்கும்.

இந்த h என்பது மிக மிக சிறிய எண். அதனால், பெரும்பாலான சமயங்களில் இது நமக்கு தெரியாது. ஆனால் எலக்ட்ரான் போன்ற சிறிய துகள்களின் இடத்தையும் வேகத்தையும் கணிக்கும்பொழுது இது நடுவில் வருகிறது.

இந்த கொள்கையின் பொருள் என்ன? இது ஒரு பெரிய கேள்வி. ஐன்ஸ்டைன் அவர்கள் இந்தக் கொள்கை ‘நம்மால் இடத்தையும் உந்தத்தையும் சரியாக துல்லியமாக அளக்க முடியாது' என்று தான் சொல்ல வேண்டும் என்று நம்பினார். ஆனால் நீல்ஸ் போர் (Niels Bohr) போன்ற விஞ்ஞானிகள், ‘ஒரு பொருளுக்கு இடம் மற்றும் உந்தம் என்பதே துல்லியமாகக் கிடையாது, இயற்கையிலேயே துல்லியமாகக் கிடையாது” என்று சொன்னார்கள். இது நினைப்பதற்கு மிகக் கடினமானது.

ஐன்ஸ்டைனுக்கு இது பிடிக்கவில்லை. அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ”கடவுள் இவ்வாறு வைத்திருக்க மாட்டார், ஒரு வேளை நமது புத்திசாலித்தனத்திற்கும் அறிவிற்கும் வேண்டுமானால் கடவும் வரையறை வைத்திருப்பார், ஆனால் ஒரு பொருள் எந்த இடத்தில் இருக்கிறது என்பது கடவுளுக்கு துல்லியமாகத் தெரியும்” என்பது அவர் நம்பிக்கை. நீல்ஸ் போர், ஃபெய்ன்மென் (Feynmann) ஆகியோர் கடவுளைப் பற்றி என்ன நினைத்தார்களோ தெரியாது, ஆனால் ”ஒரு பொருளுக்கு இடம் மற்றும் உந்தம் ஆகியவை மிகத் துல்லிய்மாக இருக்காது, இருந்தால் தானே நம்மால் அளக்க முடியுமா இல்லையா என்ற கேள்வி வரும்” என்று நம்பினார்கள். இப்போதும் பெரும்பாலான விஞ்ஞானிகளின் நம்பிக்கை, புரிதல் இதுதான். நீங்கள் குவாண்டம் இயற்பியல் பற்றி முதுகலை படிப்பு புத்தகங்களில் படித்தால், இப்படித்தான் இருக்கும்.

No comments:

Post a Comment